தனது மகனின் புகைப்படத்தை பதிவிட்ட ‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பா – ரசிகர்கள் வாழ்த்து!

0
தனது மகனின் புகைப்படத்தை பதிவிட்ட 'பாரதி கண்ணம்மா' வில்லி வெண்பா - ரசிகர்கள் வாழ்த்து!
தனது மகனின் புகைப்படத்தை பதிவிட்ட 'பாரதி கண்ணம்மா' வில்லி வெண்பா - ரசிகர்கள் வாழ்த்து!
தனது மகனின் புகைப்படத்தை பதிவிட்ட ‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பா – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வில்லி வெண்பாவாக நடித்து வரும் நடிகை பரினா தனது குழந்தையின் முழு புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட அது ரசிகர்களிடம் இருந்து வரவேற்புகளை பெற்று வருகிறது.

நடிகை பரினா

டிவி சீரியல்களுக்கு பெயர் போன விஜய் டிவியில் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு சீரியல் ‘பாரதி கண்ணம்மா’. வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மக்களின் பேராதவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தற்போது பாரதி மற்றும் கண்ணம்மா சம்பந்தப்பட்ட ரொமான்டிக் காட்சிகளுடன், பாரதியின் மனமாற்றம், வெண்பாவுக்கு கிடைக்கும் தோல்வி என சில ஸ்வாரசியமான கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கிறது.

“நிரூப் இல்லையென்றால் தாமரை வெளியேறி இருக்க மாட்டார்” – பிக் பாஸ் தாமரையின் கணவர் ஓபன் டாக்!

இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கதையோட்டத்துக்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பது வில்லி வெண்பா கதாபாத்திரம் தான். அந்த வகையில் பாரதி, கண்ணம்மாவின் பிரிவு, பாரதியின் கோபம், இருவரின் ஒன்று கூடல் என சீரியலில் நடந்த அணைத்து நிகழ்வுகளுக்கும் காரணமாக இருப்பது வில்லி வெண்பா தான். இப்படிபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களின் எக்கச்சக்கமான விமர்சனங்களை பெற்று வருபவர் பிரபல சின்னத்திரை நடிகை பரினா.

விஜய் டிவி ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ரசிகர்கள் உற்சாகம்!

இப்போது நடிகை பரினா தனது முதல் குழந்தையின் பிரசவத்திற்காக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து ஒரு மாதம் பிரேக் எடுத்து கொண்டு மீண்டுமாக அதே வில்லத்தனத்துடன் சீரியலில் களமிறங்கி இருக்கிறார். இப்படி ஒரு பக்கத்தில் தனது வில்லத்தன பணியை சிறப்பாக செய்து வர, ஒரு குழந்தையின் அம்மாவாகவும் தனது கடமையை நிறைவேற்றி வருகிறார் பரினா. அந்த வகையில் குழந்தை மீது அதிகளவு கவனம் செலுத்தி வரும் நடிகை பரினா முதன் முறையாக தனது குழந்தையின் முழு புகைப்படத்தையும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!