அபார்ஷன் பற்றி பேசிய ‘பாரதி கண்ணம்மா’ வெண்பா பரினா – ரசிகையின் கேள்விக்கு பதில்! வைரலாகும் பதிவு!

0
அபார்ஷன் பற்றி பேசிய 'பாரதி கண்ணம்மா' வெண்பா பரினா - ரசிகையின் கேள்விக்கு பதில்! வைரலாகும் பதிவு!
அபார்ஷன் பற்றி பேசிய 'பாரதி கண்ணம்மா' வெண்பா பரினா - ரசிகையின் கேள்விக்கு பதில்! வைரலாகும் பதிவு!
அபார்ஷன் பற்றி பேசிய ‘பாரதி கண்ணம்மா’ வெண்பா பரினா – ரசிகையின் கேள்விக்கு பதில்! வைரலாகும் பதிவு!

சமீபத்தில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை பரினா தனது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுடன் கேள்வி, பதில் செக்மென்ட்டை நடத்தி இருந்த நிலையில், அதில் கர்ப்பம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் ஒன்று ரசிகர்கள் மத்தியில்கவனம் பெற்று வருகிறது.

நடிகை பரினா

விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு சூப்பர் ஹிட் சீரியல் ‘பாரதி கண்ணம்மா’. இந்த சீரியலின் கதைக்களம் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றதாக எடுக்கப்பட்டு வருவதால் இதற்கு மக்கள் மத்தியில் இருந்து ஏகப்பட்ட வரவேற்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மக்கள் மத்தியில் எவ்வளவு பிரபலமோ அந்த அளவுக்கு இந்த சீரியலில் வில்லி வெண்பாவாக நடித்து வரும் நடிகை பரினாவும் ரசிகர்களிடையே பிரபலம் தான்.

‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோவில் டார்கெட் செய்யப்படும் ஜுலி & வனிதா – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

ஏனென்றால் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இதுவரை நடைபெற்ற, இப்போது நடைபெற்று கொண்டிருக்கும் அனைத்து பிரச்சனைக்கும் காரணமாக இருக்கும் ஒரே கதாப்பாத்திரம் இந்த வெண்பா தான். இதனால் இந்த வெண்பா கதாப்பாத்திரம் மக்களின் ஒட்டு மொத்த வெறுப்புகளையும் சம்பாதித்து வருகிறது. இப்படி இருக்க ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கடந்த 3 ஆண்டுகளாக வில்லியாக நடித்து வரும் நடிகை பரினாவுக்கு சமீபத்தில் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்திருந்தது.

இதனை தொடர்ந்து ஒரு சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டு மீண்டும் சீரியலில் களமிறங்கி இருக்கும் நடிகை பரினா, வெண்பாவாக அதே வில்லத்தனத்துடன் சுற்றிக் கொண்டிருக்கிறார். எப்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பரினா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கான கேள்வி, பதில் செக்மென்டை நடத்தி இருந்தார். அதில் ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விக்கு பதிலளித்திருக்கும் நடிகை பரினாவின் பதிவுகள் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

‘ராஜா ராணி 2’ சந்தியாவை பழி வாங்க சபதம் எடுக்கும் அர்ச்சனா – சீரியலில் அடுத்த திருப்பம்!

அந்த வகையில், இந்த செஷனில் ரசிகை ஒருவர் தான் கர்ப்பமான அடுத்த நாள் பயணம் மேற்கொண்டதால் அபார்ஷன் ஆகி விட்டதால் கர்ப்பமாக இருப்பவர்கள் ட்ராவல் செய்யக்கூடாதா என்று கேட்டிருந்தார். இந்த கேள்விக்கு பதிலளித்த நடிகை பரினா, பயணம் மேற்கொள்வதால் அபார்ஷன் ஆகாது. ஒருவேளை அந்த குழந்தை வீக் ஆக இருந்திருக்கலாம். உங்களது மருத்துவரை அணுகுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இது தவிர குழந்தை சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விகள், பாரதி கண்ணம்மா சீரியல் என பல கேள்விகளுக்கு நடிகை பரினா அழகாக விளக்கம் கொடுத்த பதிவுகள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here