‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோவில் டார்கெட் செய்யப்படும் ஜுலி & வனிதா – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

0
'பிக் பாஸ்' அல்டிமேட் ஷோவில் டார்கெட் செய்யப்படும் ஜுலி & வனிதா - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
'பிக் பாஸ்' அல்டிமேட் ஷோவில் டார்கெட் செய்யப்படும் ஜுலி & வனிதா - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோவில் டார்கெட் செய்யப்படும் ஜுலி & வனிதா – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

தற்போது டிஸ்னி + ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோவில் இந்த வாரம் டாஸ்குகளை சிறப்பாக செய்யாதவர்களை நாமினேட் செய்யும் போது ஒட்டு மொத்த போட்டியாளர்களும் ஜுலியை கார்னர் செய்வது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் அல்டிமேட்

மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட ‘பிக் பாஸ்’ அல்டிமேட் ரியாலிட்டி நிகழ்ச்சி தற்போது 2 வாரத்தை நிறைவு பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை நடைபெற்ற பிக் பாஸின் 5 சீசன்களில் கலந்து கொண்டவர்கள் போட்டியிட்டு வருவதால் இந்த ஷோ ஆரம்பம் முதலே கலகலப்புடனும், ஸ்வாரஸ்யமாகவும் வெளியாகி கொண்டிருக்கிறது. வழக்கம் போல இந்த ‘பிக் பாஸ்’ அல்டிமேட் வீட்டிலும் வனிதா, தாமரை போன்ற சில அதிரடியான ஆட்கள் போட்டியிட்டு வருவதால் அவ்வப்போது சில சண்டைகள் எழுந்து வருகிறது.

‘ராஜா ராணி 2’ சந்தியாவை பழி வாங்க சபதம் எடுக்கும் அர்ச்சனா – சீரியலில் அடுத்த திருப்பம்!

இதற்கிடையில் ‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான லக்சுரி பட்ஜெட் டாஸ்க் இன்றுடன் முடிவடைந்திருக்கும் நிலையில் இந்த வார டாஸ்குகளை சிறப்பாக செய்யாதவர்களை நாமினேட் செய்ய சொல்லி கேட்கப்பட்டிருக்கிறது. அதில், போட்டியாளர்கள் பலரும் ஒட்டு மொத்தமாக ஜுலியை கார்னர் செய்வது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது, தாமரை செல்வி, அனிதா, வனிதா, சினேகன் ஆகியோர் ஜுலியை நாமினேட் செய்கிறார்கள்.

ராதிகாவை திருமணம் செய்துகொள்ள தயாரான கோபி – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு!

இவர்கள் கொடுக்கும் காரணங்களில், ஷாரிக் பிரச்சனையில் ஜுலி யோசித்து சொல்வதாக சொன்னதால் அவரை நாமினேட் செய்வதாக வனிதா கூற, டாஸ்கை இன்னும் ஆர்வத்துடன் செய்ய வேண்டும் என்று சினேகன் அவரை நாமினேட் செய்வதாக சொல்கிறார். தொடர்ந்து அபிராமி, பாலாஜி, சுருதி, வனிதா, ஜுலி, சுஜா, நிரூப் ஆகியோர் வனிதாவை நாமினேட் செய்கின்றனர். அதாவது வனிதா பிக் பாஸ் வீட்டில் ரூல்ஸ் போடுகிறார்கள். ஆனால் டாஸ்கில் கலந்து கொள்ளவில்லை என்று பலரும் நாமினேட் செய்ததற்கான காரணத்தை குறிப்பிட்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!