அப்பாவை பார்க்க சென்ற லட்சுமி, சாப்பாடு ஊட்டிவிடும் பாரதி – “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
அப்பாவை பார்க்க சென்ற லட்சுமி, சாப்பாடு ஊட்டிவிடும் பாரதி -
அப்பாவை பார்க்க சென்ற லட்சுமி, சாப்பாடு ஊட்டிவிடும் பாரதி - "பாரதி கண்ணம்மா" சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
அப்பாவை பார்க்க சென்ற லட்சுமி, சாப்பாடு ஊட்டிவிடும் பாரதி – “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதி தான் அப்பா என்ற உண்மை லக்ஷ்மிக்கு தெரிய வந்துள்ளது. இந்நிலையில் லட்சுமி ஸ்கூலிற்கு போகாமல் பாரதியை அப்பா பாசத்துடன் பார்க்க வருவது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் சேர்வார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது லக்ஷ்மிக்கு அப்பா யார் என்ற உண்மை தெரிந்துள்ளது. கண்ணம்மாவிடம் கேட்டு பார்த்து முடியாமல் போனதால் தன்னுடைய அப்பாவை நானே கண்டுபிடிப்பேன் என லட்சுமி கிளம்புகிறார். கண்ணம்மாவின் ஆதார் கார்டில் உள்ள முகவரியை வைத்து அப்பாவை தேட அது பாரதியின் வீட்டை காட்டுகிறது. அப்போது லட்சுமி பாரதி வீட்டிற்குள் வர, அங்கே கண்ணம்மாவும் பாரதியும் சண்டை போட்டுக் கொள்கின்றனர்.

மணிமேகலையை கலாய்த்து தள்ளிய ‘குக் வித் கோமாளி’ குழுவினர் – வயிறு குலுங்க சிரித்த ரசிகர்கள்!

அதை எல்லாம் லட்சுமி கேட்டுவிட பாரதி தான் தன்னுடைய அப்பா என்ற உண்மை தெரியவருகிறது. ஆனால் பாரதிக்கு அம்மாவையும் என்னையும் பிடிக்கவில்லை என்பது தெரிந்ததால் லட்சுமி எதுவும் பேசாமல் வெளியே வருகிறார். கண்ணம்மா பாரதியிடம் பேசிவிட்டு வீட்டிற்கு வர குமார் போன் செய்து லட்சுமி ஸ்கூலில் இல்லை என சொல்கிறார். அதனால் கண்ணம்மா லக்ஷ்மியை எல்லா இடங்களிலும் தேடி அலைகிறார். ஆனால் லட்சுமி அப்பாவை நினைத்து கோவிலில் அழுது கொண்டிருக்கிறார்.

கண்ணம்மா லக்ஷ்மியை எல்லா பக்கமும் தேடி அலைய அவர் பாரதியை பார்க்க மருத்துவமனைக்கு செல்கிறார். இத்தனை நாள் பாரதியை பார்ப்பது போல இல்லாமல் அப்பா போல பாசத்துடன் பார்க்கிறார். பாரதி ஏன் என்னை இப்படி பார்க்கிறாய் என கேட்க, லட்சுமி என்னனு தெரியல அங்கிள் உங்களை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல இருப்பதாக சொல்கிறார். சரி பாரு என பாரதி சொல்ல சாப்பிடுறியா என கேட்கிறார். அதற்கு லட்சுமி நீங்க ஊட்டி விடுங்கள் என சொல்ல பாரதி ஆசையாக ஊட்டி விடுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!