விக்ரம் தான் வெண்பாவின் அப்பாவா? “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த திருப்பம்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஷர்மிளா விக்ரம் என இரண்டு புதிய கதாபாத்திரங்கள் என்ட்ரி கொடுத்துள்ள நிலையில், வெண்பாவிற்கு திருமணம் நடக்குமா நடக்காத என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்நிலையில் வெண்பாவின் அப்பா தான் விக்ரம் என்ற திடீர் திருப்பம் ஒன்று வர இருக்கிறது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் சில மாதங்களாக ஒரே கதையுடன் சென்று கொன்றிருக்கிறது. பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்துவிடுவார்களா என்ற நிலை மாறி லட்சுமி அப்பா யார் என கன்டென்ட் கொண்டு செல்லப்பட்டது. அதற்கு மேல் கன்டென்ட் இல்லை என்பதால் இரண்டு புதிய கதாபாத்திரங்கள் என்ட்ரி கொடுக்கப்பட்டுள்ளது. ஷர்மிளா விக்ரம் என இரண்டு கதாபாத்திரங்களும் யார் என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில் ஷர்மிளா தான் வெண்பாவின் அம்மா எனவும் வெண்பாவிற்கு திருமணம் செய்து வைக்கவே அவர் வந்திருப்பதாக காட்டப்பட்டுள்ளது.
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ தொகுப்பாளர் ரக்சன் செய்த சாகசம் – வைரல் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
வெண்பாவின் அம்மா பாரதியை சந்தித்து பேச அவருக்கு வெண்பா மீது காதல் எதுவும் இல்லை என தெரிய வருகிறது. மறுபக்கம் பாரதியும் வெண்பாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என வெளிப்படையாக சொல்லிவிட்டார். இந்நிலையில் வெண்பா தனது அம்மாவிடம் வசமாக சிக்கிக் கொள்ள போகிறார். இப்படி எபிசோடுகள் காட்டப்பட்டு வரும் நிலையில், விக்ரம் கதாபாத்திரம் யார் என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். சௌந்தர்யா வேணுவும் தனது குடும்பத்தை பற்றி எல்லாத்தையும் சொல்லும் அளவிற்கு அவருடைய கதாபாத்திரம் முக்கியமாக இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
ஆனால் கதையில் மிகப்பெரிய திருப்பம் வர இருப்பதாக வெண்பா கதாபாத்திரத்தில் நடித்த பரீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் சொல்லி இருக்கிறார். அதாவது விக்ரம் ஷர்மிளாவிற்கு பிறந்த பெண் தான் வெண்பா என காட்டப்படும் எனவும் பாரதி கண்ணம்மா பற்றி தெரிந்து கொண்ட அவர்கள் வெண்பாவின் மனதை மாற்றி அவருக்கு வேறு திருமணம் செய்வாரா, வெண்பா தனது அப்பாவை பார்த்த பின் எப்படி எல்லாம் நடந்து கொள்வார் என்பது பற்றி இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.