
1 முதல் 8 வரையுள்ள மாணவர்களுக்கு மதியம் 12:30 வரை மட்டுமே பள்ளிகள் திறப்பு – நகர நிர்வாகம் அறிவிப்பு!
வரும் மே மாதத்தில் கோடை விடுமுறை தொடங்கும் வரை உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் பள்ளிகள் செயல்படும் நேரங்களில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
பள்ளி நேரங்கள்
கடந்த சில வாரங்களாக, வடக்கு மற்றும் தென் மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் எக்கசக்கமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் காணப்படும் இயல்பு வெப்பநிலை இந்த முறை வழக்கத்தை விட சற்று அதிகமாக காணப்படுகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வகுப்புகள் செயல்படும் நேரங்களில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
அந்த வகையில் தற்போது உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் பள்ளிகள் செயல்படும் நேரங்களில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் லக்னோவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நேர மாற்றத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான தொடக்க வகுப்புகளுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர, அனைத்து வகுப்பு ஆசிரியர்களுக்கும் காலை 7:30 முதல் மதியம் 1:30 வரை பள்ளிகள் செயல்படும் என்றும், மாணவர்களுக்கான வகுப்புகள் அனைத்தும் காலை 7:30 முதல் மதியம் 12:30 வரை செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது. இப்போது பள்ளிகளில் கோடை விடுமுறை தொடங்கும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளிகளில் அறிவிக்கப்பட்டுள்ள நேர மாற்றங்களை உடனடியாக கடைப்பிடிக்க வேண்டும் என்று லக்னோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.