விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ தொகுப்பாளர் ரக்சன் செய்த சாகசம் – வைரல் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' தொகுப்பாளர் ரக்சன் செய்த சாகசம் - வைரல் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' தொகுப்பாளர் ரக்சன் செய்த சாகசம் - வைரல் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ தொகுப்பாளர் ரக்சன் செய்த சாகசம் – வைரல் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் இரு சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் மூன்றாவது சீசனும் வெற்றி பாதையில் நகர்கிறது. இந்நிலையில் தொகுப்பாளரான ரக்சன் செய்த சாகசம் மக்களை ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது.

குக் வித் கோமாளி:

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒவ்வொரு வார இறுதியிலும் மக்களை சிரிக்க வைக்கும் வகையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக தொடங்கப்பட்ட ஒன்று குக்கு வித் கோமாளி. ஆரம்பத்திலேயே ரசிகர் பட்டாளத்தை குவித்த பெருமை இந்த நிகழ்ச்சிக்கு மட்டுமே சேரும். மேலும் சீசன் 1 வெற்றி கொடுத்தது போலவே சீசன் 2 ம் குக் மற்றும் கோமாளிகளால் மெகா ஹிட் பெற்று தற்போது சீசன் 3 வெற்றி பாதையில் நகர்கிறது. விஜய் டிவியை பொறுத்தவரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போட்டியாளர்களை தொடங்கி தொகுப்பாளர் வரை அனைவரையும் பிரபலமாக்குவதை தனது கடமையாக செய்து வருகிறது.

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை கதறி அழுத சம்பவம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உருக்கம்!

அந்த வகையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 1,2,3 என மூன்றையும் தொகுத்து வழங்கும் ரக்ஷன் அவர்கள் ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் விஜய் தொலைக்காட்சியில் ஆங்கராக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து அதே நிகழ்ச்சியின் சீசன் 6 மற்றும் 7 ம் ரக்‌ஷன் தான் தொகுத்து வழங்கினார். மேலும், KPY சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும், ஜோடி Fun அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றார். இவர் வெள்ளித்திரையில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு குக் வித் கோமாளி போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருப்பது போலவே, தொகுப்பாளர் ரக்சன் அவர்களுக்கும் ரசிகர்கள் பட்டாளங்கள் பல உள்ளது. இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தற்போது பைக் ஹேண்டில் மீது உட்கார்ந்தபடி ஒட்டி பைக் ஸ்டண்ட் செய்யும் அசத்தல் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பலரும் வியந்தது மட்டுமல்லாமல் விஜய் டிவி கலைஞர்களும் ‘ரக்ஷனா இது’ என்றும், மணிமேகலை மற்றும் கவின் அவர்கள் “ஆள பாத்தா டம்மி பீசா இருக்க. ஆனா பயங்கரமான ஆளா இருக்கியேப்பா” என்று கலாய்த்தும் நகைச்சுவையாக கமெண்ட் செய்துள்ளார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here