‘பாரதி கண்ணம்மா’ சீரியல் TRP ரேட்டிங் பட்டியல் – இணையத்தில் வைரல்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2020ம் ஆண்டு 20வது வாரம் முதல் 39வது வாரம் வரை பாரதி கண்ணம்மா சீரியலின் டிஆர்பி ரேட்டிங் குறித்த மொத்த விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியல்
விஜய் டிவியில் கடந்த சில வருடங்களாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியலின் தமிழ் ரீமேக் ஆகும். தற்போது இந்த சீரியலில் முக்கிய திருப்பமாக சௌந்தர்யா கண்ணம்மாவிடம் ஹேமா தான் கண்ணம்மாவின் இரண்டாவது குழந்தை என்று கூறி விடுகிறார். அது மட்டுமின்றி வெண்பா தான் கண்ணம்மா மற்றும் பாரதி இருவருக்கும் இடையே பிரச்சனையை தூண்டி விடுகிறார் என்பதனை அறிந்து வெண்பாவை துப்பாக்கியால் சுட்டு விடுகிறார்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 போட்டியாளர்களை விமர்சிக்கும் அபிஷேக் – வெளியான ப்ரோமோ!
இப்படி பல திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் காரணமாக இந்த சீரியல் எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தினை தக்கவைத்து வருகிறது. அவ்வப்போது டிஆர்பி ரேட்டிங்கில் புள்ளிகள் குறைந்தாலும், முதல் இடத்தினை வேறு எந்த சீரியலும் பிடிக்க முடியாத அளவிற்கு இருந்து வருகிறது. தற்போது கடந்த 2020ம் ஆண்டு, அதாவது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் 20வது வாரம் முதல் பதிவாகி உள்ள டிஆர்பி ரேட்டிங் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
கடந்த 26வது வாரம், அதாவது கண்ணம்மா ஹேமாவை காப்பாற்றும் எபிசோட் ஒளிபரப்பான போது அதிகபட்சமாக 13.8 புள்ளிகள் பதிவாகி உள்ளது. தொடர்ந்து கண்ணம்மா பாரதி வீட்டில் தங்கி இருந்த எபிசோட் 13.5 புள்ளிகளுடனும் முதல் இடத்தினை பிடித்திருந்தது. விஜய் தொலைக்காட்சியில் அதிகபட்சமாக பதிவான டிஆர்பி ரேட்டிங் இது தான் என்று கூறப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் 9.9 புள்ளிகளை பெற்றுள்ளது.
பதிவான டிஆர்பி ரேட்டிங்
- 20வது வாரம் – 13.7
- 21வது வாரம் – 9.9
- 22வது வாரம் – 10.2
- 23வது வாரம் – 11.5
- 24வது வாரம் – 13.8
- 25வது வாரம் – 12.5
- 26வது வாரம் – 12.5
- 27வது வாரம் – 12.4
- 28வது வாரம் – 12.5
- 29வது வாரம் – 13.5
- 30வது வாரம் – 12.2
- 31வது வாரம் – 12.5
- 32வது வாரம் – 13.5
- 33வது வாரம் – 12.2
- 34வது வாரம் – 11.6
- 35வது வாரம் – 13.0
- 36வது வாரம் – 12.6
- 37வது வாரம் – 11.3
- 38வது வாரம் – 11.7
- 39வது வாரம் – 11.8