சரவணனிற்கு வண்டி ஓட்ட கற்றுத்தரும் சந்தியா, விக்கி பற்றி தெரிந்து கொண்ட பார்வதி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

0
சரவணனிற்கு வண்டி ஓட்ட கற்றுத்தரும் சந்தியா, விக்கி பற்றி தெரிந்து கொண்ட பார்வதி - இன்றைய
சரவணனிற்கு வண்டி ஓட்ட கற்றுத்தரும் சந்தியா, விக்கி பற்றி தெரிந்து கொண்ட பார்வதி - இன்றைய "ராஜா ராணி 2" எபிசோட்!
சரவணனிற்கு வண்டி ஓட்ட கற்றுத்தரும் சந்தியா, விக்கி பற்றி தெரிந்து கொண்ட பார்வதி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சரவணன் வண்டி வாங்கியதை நினைத்து சிவகாமி சந்தோஷத்தில் இருக்கிறார். பின் சந்தியா, சரவணனை அழைத்து வண்டி ஓட்ட கற்றுத்தருகிறார்.

ராஜா ராணி 2:

இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சரவணன் வண்டி வாங்கி வந்ததை நினைத்து சிவகாமி சந்தோஷத்தில் இருக்கிறார். உடனே சுந்தரம் சிவகாமியின் இந்த மாற்றத்தை பார்த்து சந்தோஷத்தில் இருக்கிறார். பின் சிவகாமி என் பையன் சந்தோஷத்திற்காக தான அவள் அப்படி செய்தாள் அதில் கோவப்பட என்ன இருக்கிறது என சொல்ல, இருவரும் தங்களுடைய பழைய நியாபகம் பற்றி பேசுகின்றனர். பின் நானும் வண்டி ஓட்ட கற்றுக் கொண்டு உன்னை பின்னால் வைத்து ஓட்டுவேன் என சுந்தரம் சொல்கிறார்.

பின் காலையில் சரவணன் தூங்கி கொண்டிருக்க சந்தியா சுடிதார் மாட்டிக் கொண்டு வந்து வண்டி ஓட்ட அழைக்கிறார். ஆனால் சரவணன் எந்திரிக்காமல் இருக்க டேய் சரவணா என கத்தி கூப்பிடுகிறார். உடனே சரவணன் எந்திரிக்க வண்டி ஓட்ட போக வேண்டும் என சந்தியா சொல்கிறார். உடனே சந்தியாவும், சரவணனும் வண்டி ஓட்ட அத்தையிடம் நான் தான் சொல்லி கொடுத்தேன் என சொல்லிடுவோமா என சந்தியா கேட்கிறார். பின் ஒன்று ஒன்றாக சரவணனிற்கு சந்தியா சொல்லி கொடுக்க, சரவணன் பயப்படுகிறார்.

சென்னை: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் – வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!

அப்போது சந்தியா உங்களால் முடியும் நீங்க அத்தை முன்னால் ஓட்டி பெருமை பட வேண்டும் என சந்தியா சொல்கிறார். மூன்று நாட்களாக சரவணனிற்கு சந்தியா ஓட்டி சொல்லி கொடுக்க, சந்தியாவும் சரவணனும் சந்தோசமாக இருக்கின்றனர். பின் பார்வதி விக்கி சொன்னதை நினைத்து பார்க்கிறார் பாஸ்கரிடம் போன் செய்து கேட்போம் என நினைத்து போன் செய்கிறார். அப்போது லோன் கட்ட நிறைய பணம் வேண்டும் என சொன்னீங்க இப்போ எப்படி பணம் கிடைத்தது. லோன் கட்டிவிட்டு எனக்கு மோதிரம் கொடுக்கும் அளவு பணம் இருக்கிறதா என பார்வதி கேட்கிறார்.

உடனே பாஸ்கர் விக்கி பணம் கொடுத்ததை சொல்ல, பார்வதி அப்போ விக்கி சொன்னது உண்மை தான் என நினைத்து பார்க்கிறார். மேலும் மோதிரத்தை கழட்டி தூக்கி எறிகிறார். பின் சரவணன் வண்டி ஓட்ட சொல்லிக் கொடுக்க, சரவணன் ஓட்ட தொடங்கிவிட்டார். அப்போது சந்தியா அதுக்குள்ள ஓட்ட கத்துக் கொண்டீர்கள் என சொல்லி சந்தோசப்படுகிறார். பின் அனைவரும் அமர்ந்து சாப்பிட பார்வதியை சிவகாமி மாமியார் வீட்டில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என சொல்கிறார். உடனே சுந்தரம் மாப்பிள்ளை அம்மா உன்னை போல இல்லை, அவங்க ரொம்ப நல்லவர்கள் என சொல்கிறார்.

இன்று முதல் 10 நாட்களுக்கு இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

பின் சரவணன் என்ன தப்பு என கேட்க, சிவகாமி கல்யாண வாழ்க்கையில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என சொல்கிறார். உடனே சுந்தரம் பார்வதியை எல்லா வேலையையும் செய்ய கத்துக்கொள்ள சொல்கிறார். பின் சிவகாமி சரவணனிடம் பைக் ஓட்ட கற்றுக் கொண்டாய் என கேட்க ஒரு அளவு கற்றுக் கொண்டேன் என சரவணன் சொல்கிறார். அப்போது சந்தியா சரவணன் இடுப்பில் கை வைக்க அவர் கத்தி விடுகிறார். உடனே சுந்தரம் என்னாச்சு என கேட்க பூச்சி என சொல்லி சமாளிக்கிறார்.

அனைவரும் சாப்பிட்டு விட்ட பின் சிவகாமி சந்தியாவிடம் ஏன் சிரிச்ச என கேட்க, சந்தியா எப்படி சொல்வது என தெரியாமல் இருக்கிறார். உடனே சந்தியா உங்க பையனிற்கு இடுப்பில் கை வைத்தால் கத்துவாரு என சொல்ல, சிவகாமி சிரிக்கிறார். பின் அவர் சுந்தரம் இடுப்பில் கை வைக்க, அவரும் கத்துகிறார். உடனே அர்ச்சனா செந்தில் இடுப்பில் கை வைக்க அவரும் கத்துகிறார். இது குடும்ப வியாதி போல என நினைத்து சிவகாமி சிரிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here