விஜய் டிவி ஷோவில் கலந்து கொண்ட ‘பாரதி கண்ணம்மா’ பிரபலங்கள் – வைரலாகும் புகைப்படம்!

0
விஜய் டிவி ஷோவில் கலந்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' பிரபலங்கள் - வைரலாகும் புகைப்படம்!
விஜய் டிவி ஷோவில் கலந்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' பிரபலங்கள் - வைரலாகும் புகைப்படம்!
விஜய் டிவி ஷோவில் கலந்து கொண்ட ‘பாரதி கண்ணம்மா’ பிரபலங்கள் – வைரலாகும் புகைப்படம்!

விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் துவங்கிய ‘ஸ்டார்ட் மியூசிக்’ நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டவாறு வெளியான புகைப்படங்கள் தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கடந்த 2 சீசன்களையும் வெற்றிகரமாக முடித்துள்ள ‘ஸ்டார்ட் மியூசிக்’ நிகழ்ச்சி தற்போது 3வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. அந்த வகையில் ஸ்டார்ட் மியூசிக்’ ஷோவின் கடந்த 2 சீசன்களையும் விஜய் டிவியின் பிரபல விஜே பிரியங்கா தொகுத்து வழங்கினார். இதையடுத்து விஜே பிரியங்கா ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு சென்றுள்ளதால் தற்போது துவங்கி இருக்கும் 3வது சீசனை மகாபா ஆனந்த் தொகுத்து வழங்கி வருகிறார்.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் – முழு விபரம் இதோ!

அந்த வகையில் கடந்த வாரம் முதல் ஒளிபரப்பப்பட்டு வரும் ‘ஸ்டார்ட் மியூசிக்’ சீசன் 3க்கான 2வது எபிசோடு இந்த வாரம் வெளியாக இருக்கிறது. அதில் விஜய் டிவியின் பிரபல சீரியல் ‘பாரதி கண்ணம்மா’ நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளனர். பொதுவாக சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் அனைவரையும் சீரியல்களை தவிர சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பார்ப்பதை ரசிகர்கள் விரும்புவார்கள்.

விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ வீட்டில் இருந்து வெளியேறப் போவது இவர் தானா? ரசிகர்கள் ஷாக்!

அதன் படி ‘ஸ்டார்ட் மியூசிக்’ நிகழ்ச்சியின் புதிய எபிசோடில் கலந்து கொண்ட ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நட்சத்திரங்களான அருண் பிரஷாத், சுகேஷ், ரோஷினி, ஸ்வீட்டி, ரூபாஸ்ரீ ஆகியோர் சில புகைப்படங்கலை எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதனால் இந்த வார ‘ஸ்டார்ட் மியூசிக்’ எபிசோடில் நிறைய ஃபன் மற்றும் கலாட்டாவை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!