விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் – முழு விபரம் இதோ!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை நடிகர்கள் பெறும் சம்பளம் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. அதைப் பற்றிய விபரங்களை இப்பதிவில் காண்போம்.
பாரதி கண்ணம்மா:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தை பெற்று வருகிறது. தற்போது ஒளிபரப்பாகும் எபிசோட் அடுத்தடுத்த திருப்பங்களை கொண்டுள்ளது. 8 வருடங்களுக்கு பிறகு கண்ணம்மா தனது இரண்டாவது குழந்தை பற்றிய உண்மையை தெரிந்து கொள்கிறார். இவ்வளவு நாள் தன் குழந்தை என்று நினைத்து வளர்த்த பாரதி ஹேமா கண்ணம்மா குழந்தை என்று தெரிந்தால் என்ன செய்வார்? இரண்டாவது குழந்தை ஹேமா இனி யாரிடம் இருப்பாள்? என்றார் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ வீட்டில் இருந்து வெளியேறப் போவது இவர் தானா? ரசிகர்கள் ஷாக்!
வெண்பாவை சௌந்தர்யா துப்பாக்கியால் சூடுவது போல் வெளியான ப்ரோமா அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இனி சீரியலில் வெண்பா கேரக்டர் அவ்வளவு தான் அனைத்து உண்மைகளும் தெரிந்து விடும் என்று நினைத்த நிலையில் அது வெறும் கனவாகி போனது. பல வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வரும் பாரதி மற்றும் கண்ணம்மா எப்போது ஒன்றாக சேர்வார்கள் என தொடர்ந்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இது இந்த சீரியலின் சுவாரசியமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகை, நடிகர்களின் ஒரு எபிசோட் சம்பளம் குறித்த விவரம் வெளியாகி வைரலாகி வருகிறது.
சம்பள விவரம்:
- கண்ணம்மா – ரூ.20,000
- சௌந்தர்யா – ரூ . 15,000
- பாரதி – ரூ.20,000
- வெண்பா – ரூ. 10,000
- வேணு – ரூ. 12,000