ஹேமாவை தனது வீட்டிற்கு அழைத்து செல்லும் கண்ணம்மா, அதிர்ச்சியில் பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
ஹேமாவை தனது வீட்டிற்கு அழைத்து செல்லும் கண்ணம்மா, அதிர்ச்சியில் பாரதி - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
ஹேமாவை தனது வீட்டிற்கு அழைத்து செல்லும் கண்ணம்மா, அதிர்ச்சியில் பாரதி - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
ஹேமாவை தனது வீட்டிற்கு அழைத்து செல்லும் கண்ணம்மா, அதிர்ச்சியில் பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்த நடக்கவிருக்கும் எபிசோட் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

பாரதிகண்ணம்மா சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை தக்க வைத்திருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. கடந்த மூன்று வாரங்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து இருந்தது. ஆனால் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா பற்றிய உண்மை தெரிந்ததால் மீண்டும் டிஆர்பி உயர்ந்துள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ முதல் ‘பாக்கியலட்சுமி’ வரை – டாப் சீரியல்களில் ரசிகர்களின் கமெண்ட்ஸ்!

ஹேமா தன்னுடைய மகள் தான் என்கிற உண்மையை தெரிந்து கொண்ட கண்ணம்மா சௌந்தர்யா, வேணு, அகிலன் & அஞ்சலி ஆகியோர் மீது மிகவும் கோபமாக இருக்கிறார். தனது குழந்தை கண்டிப்பாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். பாரதி பற்றி சௌந்தர்யா கூறும்போது தனக்கு அது பற்றி கவலை இல்லை என்றும் அதிரடியாக கூறி விடுகிறார், இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த உண்மையை பற்றி பாரதி இடம் யாருமே எதுவுமே சொல்லவில்லை.

பிக் பாஸ் சீசன் 5 | திருமண வாழ்கை குறித்து இசைவாணி மறைத்தது ஏன்? தோழிகள் விளக்கம்!

எப்போது இது பாரதிக்கு தெரியும்? கண்ணம்மா எப்போது ஹேமாவை தனது வீட்டிற்கு அழைத்து செல்வார் என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இனி வரும் நாட்களில் கண்ணம்மா நேரடியாக பாரதியிடம் சென்று உண்மையை சொல்வார் என்றும் கூறப்படுகிறது. ஹேமாவை தனது வீட்டிற்கு அழைத்து வந்து தானே பார்த்துக் கொள்வதாகவும் சொல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அடுத்த வாரம் சீரியல் கண்டிப்பாக பரபரப்புடன் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!