‘பாரதி கண்ணம்மா’ முதல் ‘பாக்கியலட்சுமி’ வரை – டாப் சீரியல்களில் ரசிகர்களின் கமெண்ட்ஸ்!

0
'பாரதி கண்ணம்மா' முதல் 'பாக்கியலட்சுமி' வரை - டாப் சீரியல்களில் ரசிகர்களின் கமெண்ட்ஸ்!
'பாரதி கண்ணம்மா' முதல் 'பாக்கியலட்சுமி' வரை - டாப் சீரியல்களில் ரசிகர்களின் கமெண்ட்ஸ்!
‘பாரதி கண்ணம்மா’ முதல் ‘பாக்கியலட்சுமி’ வரை – டாப் சீரியல்களில் ரசிகர்களின் கமெண்ட்ஸ்!

தமிழ் மொழியில் வெவ்வேறு சேனல்களில் ஒளிபரப்பப்படும் பல்வேறு சீரியல்களில் மக்களின் மனம் கவர்ந்த முதல் 5 சீரியல்களும் அந்த சீரியல்களின் ப்ரோமோக்கள் மீதான ரசிகர்களின் டாப் கமெண்டுகளை பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சீரியல் ப்ரோமோ

பொதுவாக ஒரு சீரியல் என்றால் அது சில ட்விஸ்ட் இருப்பதை ரசிகர்கள் எப்போதும் எதிர்பார்ப்பார்கள். ஏனென்றால் திருப்பங்கள் இல்லாவிட்டால் அந்த சீரியலின் கதைக்களம் சற்று மந்தமாகவே காணப்படுவது உண்டு. அதனால் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் சில ட்விஸ்டுடன் முடிவடையும். இப்படி எல்லா டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் மனம் கவர்ந்ததாக இருக்காது. ஆனால் ஒரு சில சீரியல்கள் எப்போதும் ரசிகர்களின் கவனம் ஈர்க்க தவறுவதில்லை.

பிக் பாஸ் சீசன் 5 | திருமண வாழ்கை குறித்து இசைவாணி மறைத்தது ஏன்? தோழிகள் விளக்கம்!

அந்த வகையில் வழக்கமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிரைம் நேர சீரியல்கள் மக்களின் பேவரைட் ஆக இருந்து வருகிறது. அதன் படி இன்றைய நாளில் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கும் சில சீரியல்களின் ப்ரோமோக்கள் மீதான ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ் குறித்த விவரங்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் முதலாவதாக, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரமோவை கண்டு ரசித்த ரசிகர் ஒருவர் ஒருவழியாக தனத்துக்கு குழந்தை பிறந்துவிட்டது.

நல்லவேளை இதில் எந்த ட்விட்ஸ்டும் இல்ல, பரவாயில்லை கண்ணன் வந்து தான் தனத்துக்கு உதவி செய்யனும்னு எழுதி வச்சிருக்கு போல, கண்ணனை இனிமேலாவது வீட்டில் சேர்த்து கொள்வார்களா என கேட்டுள்ளனர். அடுத்ததாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ப்ரோமோவை கண்ட ரசிகர்கள் கனவாக இருந்தாலும் வெண்பா பயப்படறது நல்லா தான் இருக்கு, கண்ணம்மா உயிரோட இருக்கும்போதே ஆவியா வந்துருக்காங்க, இதுக்கெல்லம் வெண்பா பயப்படுவாளா என கமெண்டுகளை கொடுத்துள்ளனர்.

தொடர்ந்து ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ப்ரோமோவுக்கு ஜெனிக்கு இப்படி எல்லாத்தையும் பண்ணிட்டு சாரி வேற கேக்குரியே செழியா, இந்த வீட்ல எது நடந்தாலும் அதுக்கு பாக்கியா தான் காரணமா, செழியனை விட்டுட்டு போ ஜெனி அப்போதான் அவனுக்கு புத்தி வரும், பொண்டாட்டி மேல அக்கரை இருக்க மாதிரி நடிக்கிறான் பாரு என்று பல்வேறு கருத்துக்களை பதிவிட்டதுடன், செழியன் கதாப்பாத்திரம் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

உடன்பிறந்த சகோதரிகளை வறுத்தெடுத்த நடிகை வனிதா – வைரல் பதிவு! ரசிகர்கள் ஷாக்!

அடுத்ததாக ‘ரோஜா’ சீரியல் ப்ரமோவுக்கு, சீரியலை நேர்மறையாக கொண்டு செல்லுங்கள், அண்ணபூரணி வாயை அடையுங்கள் அப்போது தான் TRB ரேட்டிங் அதிகரிக்கும், இந்த ஆக்ஸிடன்ட் மூலமா செண்பகம் அம்மாவுக்கு பழைய ஞாபகங்கள் திரும்ப வரும், வேறே கதையே இல்லையா உங்களுக்கு இந்த சீரியல்ல அனு, சாக்க்ஷியோட சூழ்ச்சி மட்டும்தான் ஜெயிக்கிறது, சுத்த போர் என்று கூறியுள்ளனர். இந்த கமெண்டுகளை வைத்து பார்க்கும் போது இந்த வாரம் மக்களின் ஆதரவை சம்பாதித்தது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் என்று தெரிகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!