குழந்தையாக மாறிய ‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பா – ரசிகர்கள் உற்சாகம்!

0
குழந்தையாக மாறிய 'பாரதி கண்ணம்மா' வில்லி வெண்பா - ரசிகர்கள் உற்சாகம்!
குழந்தையாக மாறிய 'பாரதி கண்ணம்மா' வில்லி வெண்பா - ரசிகர்கள் உற்சாகம்!
குழந்தையாக மாறிய ‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பா – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலமாக மக்கள் மனதில் நீங்காத இடத்தினை பிடித்தவர் தான் நடிகை பரினா. தற்போது இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா சீரியல்:

விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் அதில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா சீரியல் தான். இது தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியலின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த சீரியலில் தற்போது முக்கிய கட்டமாக பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒரே வீட்டில் கோர்ட் உத்தரவின் பெயரில் வாழ்ந்து வருகின்றனர். கண்ணம்மா வாழ்க்கையில் முக்கிய எதிரியாக பார்க்கப்படுபவர் தான் வெண்பா. சிறு வயது முதலே பாரதி மீது ஆசைப்படும் வெண்பா அவர் கண்ணம்மாவுடன் இணைவதை அடியோடு வெறுக்கிறார்.

ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் கதிர் வாழ்வில் ஜெயித்த உண்மை கதை – ரசிகர்கள் பாராட்டு!

இதனால் இருவர் இடையே தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்கி பிரித்து விடுகிறார். இதனை அறியாத பாரதி வெண்பா நல்லவர் என்று நம்பி அவர் சொல்வதை நம்பி வருகிறார். ஆனால் வெண்பா பற்றிய உண்மைகளை அறிந்த கண்ணம்மா அவரை போலீஸில் மாட்டி விடுகிறார். இப்படி இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை பரினா. இவர் ஏற்கனவே பல சீரியல்களில் நடித்திருந்தாலும், அவருக்கு பெயரையும் புகழையும் வாங்கி கொடுத்தது என்னமோ பாரதி கண்ணம்மா சீரியல் தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தையை நடிகை பரினா பெற்று எடுத்தார்.

“குக் வித் கோமாளி சீசன் 3” ப்ரோமோ பார்த்து புகழ் வெளியிட்ட பதிவு – ரசிகர்கள் உற்சாகம்!

குழந்தை பிறந்து வெறும் 1 மாதம் முடிந்துள்ள நிலையில், நடிகை பரினா மீண்டும் பழையபடி போட்டோஷூட் நடத்துவது, புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது ஆகியவற்றை செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ மிகவும் குழந்தைத் தனமாக இருப்பதால் ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர். மீண்டும் அவர் சமூகவலைத்தளங்களில் அவர் ஆக்டிவாக இருப்பதால், மீண்டும் எப்போது சீரியலில் நடிக்க வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!