இந்திய பொதுத்துறை வங்கிகளில் 41,000+ காலிப்பணியிடங்கள் – மத்திய அரசு தகவல்!

0
இந்திய பொதுத்துறை வங்கிகளில் 41,000+ காலிப்பணியிடங்கள் - மத்திய அரசு தகவல்!
இந்திய பொதுத்துறை வங்கிகளில் 41,000+ காலிப்பணியிடங்கள் - மத்திய அரசு தகவல்!
இந்திய பொதுத்துறை வங்கிகளில் 41,000+ காலிப்பணியிடங்கள் – மத்திய அரசு தகவல்!

இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் 40,000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது வேலையில்லாமல் பட்டதாரிகள் தவித்து வரும் நிலையில் அவற்றை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

காலிப்பணியிடங்கள்:

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது பொதுத்துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட தகவலின் படி எழுத்தர்கள் மற்றும் கீழ்நிலை பணியாளர்கள் உள்ளிட்ட 40,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக கூறியுள்ளது. 1 டிசம்பர் 2021 நிலவரப்படி, பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் மொத்தம் 8,05,986 பணியிடங்கள் உள்ளது. அதில் 41,177 பணியிடங்கள் காலியாக உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம்? அரசு திடீர் முடிவு!

நிதி அமைச்சகத்தின் தகவலின் படி சுமார் 12 வங்கிகளில் உள்ள காலியிடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் எஸ்பிஐ வங்கியில் 3423 வங்கி அதிகாரி பணியிடங்கள், 5121 ஊழியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அடுத்ததாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் 716 எழுத்தர் பணியிடங்கள், 4817 கீழ்நிலை ஊழியர்கள் தேவை ஏற்பட்டுள்ளது. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 3528 அதிகாரி பணியிடங்கள் 1726 எழுத்தர் பணியிடங்கள் 1041 கீழ்நிலை ஊழியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கவனத்திற்கு – 2 தவணை தடுப்பூசி கட்டாயம்!

பாங்க் ஆப் மகாராஷ்டிரா மற்றும் பேங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகளில் 190 உயர் அதிகாரி பணியிடங்கள் மற்றும் 15 ஊழியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கான கல்வித்தகுதி 10ம் வகுப்பு ஆகும். தேசிய அளவிலான தேர்வுகளை IBPS நடத்துகிறது. இப்பணியிடங்களுக்கான தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. ஆரம்ப ஊதியம் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படும். அதிகாரி பிரிவுகளில் பணி புரிவோருக்கு ஆரம்ப சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!