“குக் வித் கோமாளி சீசன் 3” ப்ரோமோ பார்த்து புகழ் வெளியிட்ட பதிவு – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருப்பதாக ப்ரோமோ வெளியானது. இந்த சீசனில் புகழ் கலந்து கொள்வாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். அது குறித்து அவர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர்.
குக் வித் கோமாளி:
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் ஆதரவை பெற்ற ஒரு நகைச்சுவை சமையல் நிகழ்ச்சி ஆகும். ஏற்கனவே இரண்டு சீசன்கள் முடிவடைந்துள்ளது. முதல் சீசனை விட இரண்டாவது சீசன் மாபெரும் வெற்றி அடைந்தது. அதை தொடர்ந்து மூன்றாவது சீசன் தொடங்கப்பட வேண்டும் என பலரின் கோரிக்கைக்கு இணங்க விரைவில் மூன்றாவது சீசன் தொடங்க இருப்பதாக ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில் கடந்த சீசனில் கலந்து கொண்ட மணிமேகலை, ஷிவாங்கி, பாலா, சுனிதா ஆகியோர் வந்தனர்.
திடீரென கோபப்பட்ட ‘பாரதி கண்ணம்மா’ அகிலன் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
ஆனால் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஆணி வேராக இருந்த புகழ் வரமாட்டார் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே. அவர் வாய்ப்புகள் இருந்தால் கண்டிப்பாக இந்த சீசன் வர வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இந்நிலையில் ப்ரோமோ பார்த்த புகழ் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் மக்கள் சந்தோசமே என்னுடைய சந்தோசம் என பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவர் வருகிறாரா என சதேகத்தில் இருக்கின்றனர்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் விஜே தீபிகா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
ஆனால் புகழ் தற்போது பல படங்களில் நடித்து பிசியாக இருக்கிறார். அதனால் அவர் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. கடந்த சீசன்களை போலவே இந்த சீசனிலும் செப் தாமு மற்றும் வெங்கட் நடுவர்களாக இருக்கின்றனர். மேலும் புதுமுக கோமாளிகள் பலர் தங்களுடைய திறமையை காட்ட இருக்கின்றனர். சமையல் செய்ய இருக்கும் குக் குறித்த விவரங்களும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.