‘பாரதி கண்ணம்மா’ சீரியலை கலாய்க்கும் ரசிகர்கள் – என்ன காரணம் தெரியுமா?
விஜய் டிவியி ஓளி பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு அப்பாவாக நடிக்கும் ரிஷி அவர்களின் நடிப்பு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா :
விஜய் டிவியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள சீரியலில் ஒன்று பாரதி கண்ணம்மா. எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் கருப்பு நிற தோற்றத்தை மையப்படுத்தி சீரியலின் கதை நகர்ந்தது. பாரதி கண்ணம்மாவை திருமணம் செய்தது பிடிக்காமல் இருந்த பாரதியின் அம்மா சௌந்தர்யா கண்ணம்மாவின் நிறத்தை வைத்து வெறுக்கிறார். அத்தையின் மனதை கவர வேண்டும் என்ற நோக்கில் பல செயல்களை செய்கிறார்.
பாரதியின் மன்னிப்பை கேட்டு நிபந்தனை வைக்கும் கண்ணம்மா – ‘பாரதி கண்ணம்மா’ அடுத்த கதைக்களம்!
இதற்கிடையில் கண்ணம்மா கர்ப்பமாக, அத்தை சௌந்தர்யாவுக்கு கண்ணம்மா மேல் அன்பு வருகிறது. இந்த நேரத்தில் கண்ணம்மாவுக்கு என்று இருந்த ஒரே ஆதரவான பாரதி கண்ணம்மாவை சந்தேகப்படுகிறார். கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறி வாழ தொடங்குகிறார். மீண்டும் கண்ணம்மாவையும் பாரதியையும் சேர்த்து வைக்க அத்தை சௌந்தர்யா பல முயற்சிகளை செய்து வருகிறார். அதில் ஒன்றாக தற்போது பாரதியின் அப்பா நெஞ்சு வலி வந்தது போல நடித்து பாரதியையும் கண்ணனாமாவையும் சேர்க்க முயற்சித்து வருகிறார்.
சன் டிவி ‘ரோஜா’ முதல் விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வரை – ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!
இந்த சீரியலில் பாரதியின் அப்பாவாக நடித்து வரும் ரிஷி கேரக்டருக்கு இதுவரை பெரியதாக டயலாக்குகள் எதுவும் இல்லை. ஆனாலும் கதையில் தவறாமல் இருந்து வருகிறார். தற்போது இவர் நெஞ்சு வலியால் அவதிபடுவது போல மருத்துவமனையில் நடித்த காட்சிகள் பாரதி கண்ணம்மா ரசிகர்களை கவர்ந்து வருகிறது. முதல் முறையாக பாரதிகண்ணம்மா சீரியலில் ரொம்ப நேரம் டயலாக் பேசி நடிச்சிருக்கீங்க என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.