சன் டிவி ‘ரோஜா’ முதல் விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வரை – ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!

0
சன் டிவி 'ரோஜா' முதல் விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' வரை - ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!
சன் டிவி 'ரோஜா' முதல் விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' வரை - ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!
சன் டிவி ‘ரோஜா’ முதல் விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வரை – ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!

டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வரும் சூப்பர் ஹிட் சீரியல்களின் இன்றைய ப்ரோமோ குறித்தும்,அதற்கு ரசிகர்கள் அளித்துள்ள கமெண்டுகள் ககுறித்தும் காண்போம்.

டாப் சீரியல்கள்:

சினத்திரையில் எத்தனை சேனல்கள் இருந்தாலும் சீரியல் ஹிட் ஆகி ரசிகர்கள் மனதை கவர்வது என்னமோ.. விஜய் டிவி மற்றும் சன்டிவி தான். மற்ற சேனல்களின் சீரியல்கள் என்ன தான் தனக்கென ரசிகர்களை இழுத்தாலும் ஹிட் வரிசையின் பின்னால் தான் உள்ளது.

விஜய் டிவியில் மீண்டும் களமிறங்கும் பிரபல சீரியல் நடிகை – ரசிகர்கள் கொண்டாட்டம்!

தற்போதைய கால கட்டத்தில் அனைத்து வயதினரும் சீரியல் பார்க்க தொடங்கி விட்டனர். இதனால் ப்ரோமோக்கள் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பப்பட்டு வருகிறது. ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் அளித்து வரும் கமெண்டுகளுக்கு தற்போது அதிக வரவேற்பு உள்ளது.

ரோஜா:

ரோஜாவும் கல்பனாவும் சேர்ந்து செண்பகத்திடம் பழைய நினைவுகளை திரும்ப யோசித்து பார்க்குமாறு கூறுமாறு ப்ரோமோ அமைத்துள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் செண்பகத்துக்கு பழைய நினைவுகள் திரும்பி ரோஜாவுடன் சேர்ந்து இருப்பதை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் செண்பகத்திற்கு பழைய நினைவுகள் வரவேண்டும் என்ற கருத்துக்களையே தெரிவித்துள்ளனர்.

பாக்யலட்சுமி:

பாக்கியா மொத்த சமையல் ஆர்டரையும் சிறப்பாக செய்து முடிப்பது போல் ப்ரோமோ வந்துள்ளது. இதற்கு ரசிகர் ஒருவர், இது வெறும் சீரியல் அல்ல பெண்களின் கனவு எப்படியாவது வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று அதைத் திரையில் பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ஒரு விஷயத்தில் முன்னேறும் போது பல தடைகள் வரும் ஆனால் கடின உழைப்பு வீண் போகாது சூப்பர் பாக்கியா என்று கூறியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

தனத்திற்கு குழந்தை பிறப்பதற்குள் குலதெய்வம் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று முருகன் வந்து சொல்ல, உடனே தனம் கோவிலுக்கு போக கண்ணனையும் வர சொல்லவா என்று கேட்க மூர்த்தி அதற்கு ஒத்துக்கொள்கிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் விஜே தீபிகா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

இதற்கு, ரசிகர், பேசாம பருத்தி மூட்ட(கண்ணன்) குடோன்லயே இருந்திருக்கலாமே மூர்த்தி என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அம்மா செத்து ஒரு வாரம் ஆகல அதுக்குள்ள குலதெய்வ கோவிலுக்கு போறதா சீரியல் இருந்தாலும் ஞாயம் வேணுமா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் முதல்ல தனத்தோட கனவுல, அப்புறம் மூர்த்தி கனவுல.. அப்படினு இன்னும் ஒரு‌ மாசத்துக்கு லெட்சுமி அம்மா ரொம்ப பிசி என கூறியுள்ளார். யாரு வேணாலும் சாகடும் நாங்க மேக்கப் போட தா இருப்போம் என்று கூறியுள்ளனர்.

பாரதி கண்ணம்மா:

வெண்பா சொல்லும் அனைத்தையும் கண்ணம்மா கேட்டு நடப்பது போல் ப்ரோமோய் வந்துள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் எப்போதான் இந்த ட்ராக்க முடிப்பீங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் வெண்பாவுக்கு பதில் சொல்லதா கண்ணம்மாவுக்கு வேலையோ? என்று கேட்டுள்ளார். போன வாரம் வெண்பா சொல்றது பொய்னு கண்ணம்மா யோசிச்சாங்க ஆனா இந்த வாரம் வெண்பாவுக்கு அடங்கி நடக்கராங்க அப்போ போனவாரம் வந்த அபூர்வ சிந்தனை இப்போ எங்க போச்சு என்று கேட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!