பாரதி கண்ணம்மா’ சீரியல் அருண் யார் தெரியுமா? அசர வைக்கும் திரைப்பயணம்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
பாரதி கண்ணம்மா' சீரியல் அருண் யார் தெரியுமா? அசர வைக்கும் திரைப்பயணம்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
பாரதி கண்ணம்மா' சீரியல் அருண் யார் தெரியுமா? அசர வைக்கும் திரைப்பயணம்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
பாரதி கண்ணம்மா’ சீரியல் அருண் யார் தெரியுமா? அசர வைக்கும் திரைப்பயணம்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியாக நடித்து வரும் நடிகர் அருண் பிரசாத். இவர் தனது தற்போதைய புகழை அடைவதற்கு கடந்து வந்த வாழ்க்கை பயணத்தை குறித்து இந்த பதிவில் காண்போம்.

நடிகர் அருண்:

பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியாக நடித்து வரும் நடிகர் அருண் இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமடைந்துள்ளார். இதனால் இவருக்கு நாளுக்கு நாள் அதிக ரசிகர்கள் சேர்ந்து வருகின்றனர். அருணிற்கு பெண் ரசிகைகளும் அதிகம் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் அருண் எப்போது ஆக்ட்டிவாக பதிவுகளை இட்டு வருவார். அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாடில் இருந்து பல ரீல்ஸ் மற்றும் புகைப்படங்கள் அவரது இணைய பக்கங்களில் வெளியிடுவார்.

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே 2 – ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா?

சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து நடிகராக வேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்திருக்கிறார் அருண் பிரசாத். ஆரம்பத்தில் எதிர்பார்த்தபடி திரைப்பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் குறும்படங்களில் நடித்து வந்தார் இவர். வெங்கடேஷ் இயக்கிய “நிகழ் காலம்” என்ற தமிழ் குறும்படத்தில் அருண் அறிமுகமானார். தொடர்ந்து, ”ஏனோ வானிலை மாறுதே,” “மதிமயங்கினேன்,” “கள்ளன்,” “ஏதோ மாயம் செய்தாய்,” “யானும் தீயவன்,” “பகல் கனவு” உட்பட ஏராளமான குறும்படங்களில் நடித்திருக்கிறார். அதில் ஏனோ வானிலை மாறுதே குறும்படம் அருணுக்கு சிறந்த நடிகருக்கான அங்கீகாரத்தை கொடுத்தது.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஹேமா & லட்சுமியின் புதிய தோற்றம் – வைரலாகும் புகைப்படம்!

மேலும், வெள்ளித்திரையில் ‘மேயாத மான்’, ‘ஜடா’ ஆகிய திரைப்படங்களில் துணை நடிகராகவும் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் மூலமாக தான் அருணிற்கு பாரதி கண்ணம்மா வாய்ப்பு கிடைத்தது. தற்போது தமிழ் சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அருண் உள்ளார். இவர் அடிக்கடி தனது ரசிகர்களுக்காக தனது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவார். இவரது ஒரே கனவு தான் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பது தான். அருணின் கனவு விரைவில் நனவாக்க அவரது ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!