விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே 2 – ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா?

0
விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே 2 - ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா?
விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே 2 - ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா?
விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே 2 – ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா?

விஜய் டிவியில் மதியம் நேரம் ஒளிபரப்பாகி மெகா ஹிட் ஆன ஈரமான ரோஜாவே சீரியல் சமீபத்தில் தான் முடிந்துள்ள நிலையில், ‘ஈரமான ரோஜாவே 2’ விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதை பற்றிய தகவலை அறிந்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஈரமான ரோஜாவே 2:

விஜய் டிவியில் மாலை மற்றும் இரவு நேர தொடர்கள் தான் அதிக அளவில் பேசப்படுகிறது. ஹிட் வரிசையிலும் உள்ளது. ஆனால் மதியம் நேர ஒளிபரப்பில் மெகா ஹிட் அடித்த ஒரு சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இது முழுக்க முழுக்க குடும்பத்தை சுற்றியே நடக்கும் கதையாக தான் இருக்கும். இந்த சீரியலில் தான் முதன் முதலில் பவித்ரா நாயகியாக நடிக்க தொடங்கினார். வெற்றியாக நடித்த திரவியமும் இந்த சீரியலில் தான் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். மிக அதிகமான வெற்றி காரணமாக கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் இந்த சீரியலில் ஓடிய நிலையில், தற்போது சில மாதங்களுக்கு முன்னர் தான் சமீபத்தில் முடிந்தது.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஹேமா & லட்சுமியின் புதிய தோற்றம் – வைரலாகும் புகைப்படம்!

இதேபோல், தொகுப்பாளராக இருந்து வந்த ஜாக்குலின் மற்றும் சித்தார்த் நடித்து வந்த மதிய நேர தொடராக ஆரம்பித்து ரசிகர்களின் பேராதரவோடு இரவு நேரத்திற்கு மாற்றப்பட்டு வெற்றிகரமாக ஓடிய தொடர் தான் தேன்மொழி BA. சமீபத்தில் தான் இந்த தொடரும் முடிந்தது. இந்த தொடரில் சித்தார்த் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார் என்று அனைத்து தரப்புகளில் இருந்தும் பாராட்டை பெற்றார். தற்போது விஜய் டிவி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது வீட்டில் குடியேறிய KPY அறந்தாங்கி நிஷா – வெளியான வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!

அதவாது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் சிறு வயது முதல் கலந்து கொண்டவர். பின்னர் 7C என்ற குழநதைகளின் நாடகத்தின் மூலம் நடிக்க அறிமுகம் ஆன கேபிரியல்லா ஒரு தொடரில் நடிக்க இருக்கிறார். பிக்பாஸ் சீசன் 4 ல் கலந்து கொண்டு மிகவும் புகழடைந்தவர் கேபிரியல்லா. சித்தார்த் மற்றும் கேபிரியல்லா இருவரும் சேர்ந்து ஈரமான ரோஜாவே 2 சீரியலில் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!