விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஹேமா & லட்சுமியின் புதிய தோற்றம் – வைரலாகும் புகைப்படம்!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியல் ஹேமா & லட்சுமியின் புதிய தோற்றம் - வைரலாகும் புகைப்படம்!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியல் ஹேமா & லட்சுமியின் புதிய தோற்றம் - வைரலாகும் புகைப்படம்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஹேமா & லட்சுமியின் புதிய தோற்றம் – வைரலாகும் புகைப்படம்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மாவின் இரட்டை குழந்தைகளாக நடித்து வரும் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் ஒரே மாதிரியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய ஸ்வாரசியமான கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீரியலில் தற்போது கண்ணம்மாவுடன் தங்கி இருக்கும் பாரதி, இன்னும் 3 நாட்களில் அந்த வீட்டை விட்டு கிளம்பிவிடுவதாக மிரட்டி கொண்டிருக்கிறார். ஏற்கனவே கண்ணம்மாவுடன் 3 நாட்கள் தங்கி இருந்த பாரதிக்கு சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. இது இப்படியே தொடர்ந்தால் கண்டிப்பாக பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்து வர பாரதி வீட்டை விட்டு செல்வதாக அடம் பிடித்து வருகிறார்.

புது வீட்டில் குடியேறிய KPY அறந்தாங்கி நிஷா – வெளியான வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!

இப்படி இருக்க பாரதி, கண்ணம்மாவை சேர்த்து வைப்பதற்காகவே அந்த சீரியலில் வாய்தா வடிவுக்கரசி என்றதொரு புதிய கதாப்பாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கதாப்பாத்திரத்தில் நகைச்சுவை நட்சத்திரம் அறந்தாங்கி நிஷா நடித்து வருகிறார். ஏற்கனவே பாரதியை கலாய்த்து கடுப்பேற்றி வரும் கண்ணம்மாவுடன் இப்போது நிஷாவும் சேர்ந்துள்ளதால் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம் சற்று விறுவிறுப்பாகி இருக்கிறது.

திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆனதை கொண்டாடிய ரேஷ்மா, மதன் ஜோடி – இன்ஸ்டா வைரல்!

இதற்கு மத்தியில் பாரதி வீட்டில் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் ஒன்றாக சில நேரங்களை செலவிட்டு வருகின்றனர். இருவரும் உடன் பிறந்தவர்கள் தான் என்ற உண்மை தெரியாத பட்சத்தில் இவர்களுக்குள் ஒரு பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சீரியலில் எப்போதும் ஏழை வீட்டு குழந்தை தோரணையில் லட்சுமி உடை உடுத்த, ஹேமாவோ பணக்கார வீட்டு குழந்தையாக உடையில் சற்று வித்தியாசம் காட்டுவார். இந்நிலையில், ஹேமா மற்றும் லட்சுமி இருவரும், லட்சுமியின் உடையை அணிந்து கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!