மீண்டும் இணைந்த “பாரதி கண்ணம்மா” சீரியல் அகில், அஞ்சலி – வைரலான மியூசிக் ஆல்பம்!
“பாரதி கண்ணம்மா” சீரியலில் அஞ்சலி ஜோடியாக நடித்ததன் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் அகிலன் கண்மணி. இருவரும் இணைந்து நடித்த மியூசிக் ஆல்பம் ஒன்று தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது.
அகிலன் கண்மணி ஜோடி:
தமிழ் சின்னத்திரை சீரியல்களில் முன்னணி கதாபாத்திரம் முதல் சிறிய கதாபாத்திரம் வரை அனைவருமே மக்களிடம் பிரபலமாக இருக்கின்றனர். காரணம் சீரியலை அந்த அளவிற்கு கதையுடன் ஒன்றி மக்கள் பார்த்து ரசிக்கின்றனர். அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவின் தம்பியாக அகில் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் அகிலன். அவருக்கு ஜோடியாக கண்ணம்மாவின் தங்கையாக களமிறங்கியவர் தான் கண்மணி. இருவரும் ஆரம்பத்தில் சண்டை போட்டுக் கொண்டே இருந்தாலும் அதன் பின் இருவரின் காதல் காட்சிகளுக்கு அதிகம் ரசிகர்கள் இருந்தனர்.
‘செம்பருத்தி’ ஷபானா, ஆர்யன் திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்து? ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்நிலையில் அகிலன் திடீரென சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனால் சீரியல் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். மீண்டும் இருவர் கெமிஸ்ட்ரி போல வராது என ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். ஒரு சிலர் அவர்கள் மீண்டும் சீரியலில் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் சீரியலில் அவர் விலகிய பின் பல படங்களில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தற்போது செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
“பாக்கியலட்சுமி” சீரியல் ஈஸ்வரி பாட்டிக்கு பிறந்தநாள் – வாழ்த்து சொன்ன இனியா நேஹா மேனன்!
அதன்படி அகிலன் மற்றும் கண்மணி இணைந்து மியூசிக் ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளனர். சீரியலில் இருப்பதை போல காதல் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் அந்த ஆல்பம் இருக்கிறது. மேலும் அந்த பாடலை பாடிய கார்த்திக் குரலிற்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் மீண்டும் இந்த ஜோடியை திரையில் பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். இந்த ஆல்பம் வெளியாகி ஒரே நாளில் 2 லட்சத்திற்கு அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.