‘செம்பருத்தி’ ஷபானா, ஆர்யன் திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்து? ரசிகர்கள் அதிர்ச்சி!

0
'செம்பருத்தி' ஷபானா, ஆர்யன் திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்து? ரசிகர்கள் அதிர்ச்சி!
'செம்பருத்தி' ஷபானா, ஆர்யன் திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்து? ரசிகர்கள் அதிர்ச்சி!
‘செம்பருத்தி’ ஷபானா, ஆர்யன் திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்து? ரசிகர்கள் அதிர்ச்சி!

சின்னத்திரையில் சமீபத்தில் ஹாட் டாபிக் ஆக போய்க் கொண்டிருப்பது ஷபானா மற்றும் ஆர்யன் இடையிலான பிரச்சனைகள் தான். இதனை பற்றிய தகவல்கள் தான் தற்போது சமூக வலைத்தளம் முழுவதும் இருந்து வருகிறது.

பரவி வரும் வதந்திகள்:

சமீப காலமாக அனைத்து இடங்களிலும் சின்னத்திரை பிரபலங்களின் திருமண விழாக்கள் தான் களைகட்டி வருகிறது. இதனை முதலில் ஆரம்பித்த ஜோடியினர் தான் ‘பாக்யலக்ஷ்மி’ ஆர்யன் & ‘செம்பருத்தி’ ஷபானா. இவர்கள் இருவரும் கடந்த நவம்பர் மாதம் 11ம் தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் குறிப்பிட்ட சில நெருங்கிய நண்பர்களுடன் மட்டும் திருமணத்தை நடத்தினார்கள். இவர்கள் காதலிக்கும் செய்தி குறித்து முதலில் பல வதந்திகள் பரவ தொடங்கியது. பிறகு சில நாட்கள் கழித்து ஷபானா தானே அதை அறிவித்தார். ஆர்யனின் ரசிகை ஒருவர் உங்களை திருமணம் செய்து கொள்ளலாமா??என்று கேட்டிருந்தார்.

“பாக்கியலட்சுமி” சீரியல் ஈஸ்வரி பாட்டிக்கு பிறந்தநாள் – வாழ்த்து சொன்ன இனியா நேஹா மேனன்!

இதற்கு ஆர்யன், ஷாபனாவை டாக் செய்து என்ன பதில் சொல்லட்டும் என்று கேட்டிருந்தார். அதற்கு ஷபானா “MINE” என்று குறிப்பிட்டு பதில் அளித்திருந்தார். இதன் பின்னர் இவர்கள் அடிக்கடி பல போட்டோக்கள், புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். காதலை அறிவித்த சில மாதங்களிலேயே திடீரென்று ஷபானா திருமண கெட்டப்பில் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை தனக்கும் ஆர்யனுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக ஆனந்த கண்ணீருடன் கூறினார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் காதலை அறிவித்து சில மாதங்கள் தான் ஆனது அதற்குள் திருமணமா? என்று ஆச்சர்யப்பட்டனர்.

“பாரதி கண்ணம்மா” சீரியல் ரோஷினி ஹரிப்ரியன் தவறவிட்ட படவாய்ப்புகள் – ரசிகர்கள் ஷாக்!

மேலும் இவர்களின் திருமண போட்டோக்கள் அனைத்தும் செம வைரலாக இருந்தது. இவர்களின் திருமணத்தில் ஆர்யனின் அம்மா தான் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஷபானா மற்றும் ஆர்யன் திருமணம் முடித்து 1 மாதம் கடந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார் என்றும், விவகாரத்து பெற இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும், ஆர்யனின் வீட்டில் ஷபானாவை மாற்று மதத்தை சார்ந்த பெண் என்பதால் அரை மனதோடு தான் சம்மதித்தனர் என்றும், ஷபானா வீட்டில் சுத்தமாகவே ஒத்துக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் இவர்கள் இருவரும் தற்போது தனித்தனியாக தான் இருக்கிறார்கள் என்றும் பல வதந்திகள் பரவி வருகிறது. ஷபானா சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட பதிவு ரசிகர்களுக்கு சந்தேகத்தை எழுப்பியது. அதில் மிகவும் உருக்கமான கருத்தை வெளிப்படுத்தியிருந்தார் ஷபானா. மற்றவர்களின் வாழ்க்கையில் அவர்கள் கடந்து வந்த பாதையும், வலியும் நமக்கு தெரியாது. அவர்களின் வாழ்க்கையில் பல விஷயங்கள் இருக்கலாம். அதனால் அடுத்தவர்களை பற்றி மனம் வருந்தும் படி எதுவும் பேசாதீர்கள் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது ஆர்யன், நாங்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக தான் இருக்கிறோம். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார். இந்த விஷயத்தில் பரவி வரும் வதந்திகள் குறித்து ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!