“பாக்கியலட்சுமி” சீரியல் ஈஸ்வரி பாட்டிக்கு பிறந்தநாள் – வாழ்த்து சொன்ன இனியா நேஹா மேனன்!

0
"பாக்கியலட்சுமி" சீரியல் ஈஸ்வரி பாட்டிக்கு பிறந்தநாள் - வாழ்த்து சொன்ன இனியா நேஹா மேனன்!
“பாக்கியலட்சுமி” சீரியல் ஈஸ்வரி பாட்டிக்கு பிறந்தநாள் – வாழ்த்து சொன்ன இனியா நேஹா மேனன்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாட்டி ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ராஜேஸ்வரி அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு இனியா கதாபாத்திரத்தில் நடிக்கும் நேஹா மேனன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்.

பாக்கியலட்சுமி:

இல்லத்தரசிகளின் கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் “பாக்கியலட்சுமி” சீரியலில், விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பாக்கியாவிடம் கோபி எப்போது சிக்குவார் என்பதே சீரியல் பார்க்கும் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த சீரியலில் பாக்கியா கதாபாத்திரத்தில் கன்னட நடிகை சுஜித்ரா நடித்து வருகிறார். அவருடைய கணவராக கோபி கதாபாத்திரத்தில் சதீஸ் நடித்து வருகிறார். மேலும் அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர்.

“பாரதி கண்ணம்மா” சீரியல் ரோஷினி ஹரிப்ரியன் தவறவிட்ட படவாய்ப்புகள் – ரசிகர்கள் ஷாக்!

முதல் பையனாக செழியன் கதாபாத்திரத்தில் ஆர்யன், இரண்டாவது பையன் எழில் கதாபாத்திரத்தில் விஷால் நடிக்கிறார். அவருடைய மகளாக பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் நேஹா மேனன் நடித்து வருகிறார். மேலும் கோபியின் அம்மாவாக ஈஸ்வரி கதாபாத்திரத்தில் முன்னணி நடிகை ராஜலக்ஷ்மி நடித்து வருகிறார். அவர் அந்த சீரியலில் அன்பான அம்மாவாகவும், கொடுமைக்கார மாமியாராகவும், பாசமான பாட்டியாகவும் நடித்து வருகிறார்.

மக்கள் மனம் கவர்ந்த டாப் 5 சீரியல் கதாபாத்திரங்கள் – “பாரதி கண்ணம்மா” வினுஷா தேவி முதலிடம்!

தமிழ் சினிமாவில் பல படங்கள், சீரியல்களில் நடித்த அவருக்கு இன்று பிறந்தநாள். அதனால் சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடிக்கும் நேஹா மேனன் அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் அவருடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவை பார்த்த பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!