8 வருடங்களுக்கு பிறகு தொடங்கும் ‘பாரதி கண்ணம்மா சீசன் 2’? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0
8 வருடங்களுக்கு பிறகு தொடங்கும் 'பாரதி கண்ணம்மா சீசன் 2'? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
8 வருடங்களுக்கு பிறகு தொடங்கும் 'பாரதி கண்ணம்மா சீசன் 2'? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
8 வருடங்களுக்கு பிறகு தொடங்கும் ‘பாரதி கண்ணம்மா சீசன் 2’? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் அடுத்த சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது என்ற தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

பாரதிகண்ணம்மா சீரியல்

தெலுங்கில் கார்த்திகை தீபம் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வரும் சீரியலின் தமிழ் ரீமேக்தான் பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியல் கடந்த 3 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. தற்போது எட்டு வருடங்களுக்குப் பிறகு கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் பிரிந்து இருப்பது போல் காட்டப்படுகிறது. தற்போது இந்த சீரியலின் முக்கிய கட்டமாக ஹேமாவிற்கு கண்ணம்மா பற்றிய உண்மை எப்போது தெரியும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஹேமாவிடம் உண்மையை கூறிய கண்ணம்மா, ஷாக்கான பாரதி – பலவித திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ!

அதேபோல் ஹேமாவிற்கு கண்ணம்மா பற்றிய உண்மை தெரிய வந்தால் கண்டிப்பாக பாரதிக்கும் தெரிந்துவிடும். பாரதி தனது தவறை உணர்ந்து கொள்வார் என்பது போன்ற காட்சிகள் எப்போது வரும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இது இப்படியிருக்க தெலுங்கில் தற்போது வருணை பார்த்த பிறகு பாரதி தனது தவறை உணர்ந்து கொள்வார் என்பது போல் காட்டப்பட்டு வருகிறது. அதேபோல்தான் தமிழிலும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீ தமிழ் பிரபல சீரியல்களின் சீசன் 2 ப்ரோமோ வெளியீடு – ரசிகர்கள் உற்சாகம்! எகிறும் எதிர்பார்ப்பு!

இதனால் பாரதி கண்ணம்மா சீரியல் இத்துடன் நிறுத்தப்பட்டு அடுத்து சீசனாக ஒளிபரப்பப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை போலவே தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் பாரதி கண்ணம்மா சீரியலும் அதேபோல் ஒளிபரப்பாக வாய்ப்புகள் இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது சீசனில் நடிகை அனிகா கண்ணம்மாவின் குழந்தையாக நடிக்கலாம் என்றும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!