ஹேமாவிடம் உண்மையை கூறிய கண்ணம்மா, ஷாக்கான பாரதி – பலவித திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ!

0
ஹேமாவிடம் உண்மையை கூறிய கண்ணம்மா, ஷாக்கான பாரதி - பலவித திருப்பங்களுடன் 'பாரதி கண்ணம்மா' ப்ரோமோ!
ஹேமாவிடம் உண்மையை கூறிய கண்ணம்மா, ஷாக்கான பாரதி - பலவித திருப்பங்களுடன் 'பாரதி கண்ணம்மா' ப்ரோமோ!
ஹேமாவிடம் உண்மையை கூறிய கண்ணம்மா, ஷாக்கான பாரதி – பலவித திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ!

பிரபல சீரியல் ஆன பாரதி கண்ணம்மாவின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் கண்ணம்மா ஹேமாவிடம் உண்மையை கூறி விடுகிறார்.

பாரதி கண்ணம்மா சீரியல்

டிஆர்பி ரேட்டிங்கில் எப்போதும் முதல் இடத்தில் இருப்பது பாரதி கண்ணம்மா சீரியல் தான். தற்போது இந்த சீரியலில் ஹேமா பற்றிய உண்மையை சௌந்தர்யா கண்ணம்மாவிடம் கூறி விடுகிறார். இதனால் அனைவர் மீதும் மிகவும் கோபமாக இருக்கும் கண்ணம்மா தனது மகளை தன்னுடன் அழைத்துச் செல்வதில் மிகவும் உறுதியாக இருக்கிறார். சௌந்தர்யா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் பாரதியை பிரிந்து ஹேமாவை அழைத்துச் சென்றுவிட்டால் பாரதி மீண்டும் குடிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

ஜீ தமிழ் பிரபல சீரியல்களின் சீசன் 2 ப்ரோமோ வெளியீடு – ரசிகர்கள் உற்சாகம்! எகிறும் எதிர்பார்ப்பு!

ஆனால் அதுபற்றி தனக்கு எந்த ஒரு கவலையும் கிடையாது என்று அதிரடியாக கூறி விடுகிறார். பின்னர் கூடிய விரைவில் ஹேமாவிடம் உண்மையை கூறி அவரை என் வீட்டுக்கு அழைத்து சென்று விடுவேன் என்றும் அனைவரிடமும் சொல்லி விட்டு சென்று விடுகிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் மிகவும் கவலையுடன் இருக்கின்றனர். தற்போது லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் கண்ணம்மா பாரதி வீட்டிற்கு வந்து ஹேமாவை தான் அழைத்து செல்ல இருப்பதாக கூறுகிறார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ எலிமினேட் ஆகும் சின்னப்பொண்ணு? அக்சராவுடன் அழுகை! வெளியான ப்ரோமோ!

முதலில் கோவிலுக்கு அழைத்துச் சென்று விட்டு பின்னர் வந்து விடுவதாகவும் கூறுகிறார். அப்போது பாரதி மற்றும் ஹேமா இருவரும் மாடியில் இருந்து இறங்கி வருகின்றனர். கண்ணம்மாவை பார்த்ததும் ஹேமா மிகவும் சந்தோஷமடைந்து நாம் எங்கே போகிறோம் என்று கேட்கிறார். அதற்கு கண்ணம்மா தனக்கு ஹேமாவை எங்கு வேண்டுமானாலும் அழைத்து செல்வதற்கு உரிமை இருக்கிறது. அதனால் நான் அழைத்துச் செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்று விடுகிறார். ஹேமாவிடம் நீ எனக்குப் பொண்ணு மாதிரி என்றும் கூறுகிறார். இதனால் கூடிய விரைவில் ஹேமாவிற்கு உண்மை தெரியவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!