விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ எலிமினேட் ஆகும் சின்னப்பொண்ணு? அக்சராவுடன் அழுகை! வெளியான ப்ரோமோ!
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் லேட்டஸ்ட் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் பாடகி சின்னப்பொண்ணு அழுது கொண்டு இருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி
விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு சீசன்களாக மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. தற்போதைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் விரும்பிப் பார்க்கும் ஒரு ரியாலிட்டி ஷோவாக பிக்பாஸ் இருந்து வருகிறது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டு வாரங்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த முறையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கியிருக்கிறார்.
ஜீ தமிழ் பிரபல சீரியல்களின் சீசன் 2 ப்ரோமோ வெளியீடு – ரசிகர்கள் உற்சாகம்! எகிறும் எதிர்பார்ப்பு!
இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் இன்று ஒருவர் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று அறிவிக்கப்பட உள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் பலரும் காப்பாற்றப்பட்ட நிலையில் இன்று ஒரு சிலர் மட்டுமே நாமினேஷனில் இருக்கின்றனர். யார் இன்று வெளியேற போகிறார்கள் என்பது பற்றிய எதிர்பார்ப்பு மிகவும் எகிறி உள்ளது. தற்போது லேட்டஸ்டாக இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
கண்ணனுக்கு குழந்தையை காட்ட நினைக்கும் தனம், மறுக்கும் குடும்பத்தினர் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ!
அதில் நடிகர் கமல்ஹாசன் அனைவரையும் அதாவது வீட்டில் உள்ள அனைவரையும் போட்டியில் மிளிர்ந்தர்வர்கள் யார்? காணாமல் போனவர்கள் யார்? என்று இரண்டு வகையாக பிரிக்க சொல்கிறார். அப்போது பலரும் நாதியாவை தேர்ந்தெடுக்கின்றனர். இதனை கேட்டு விட்டு நாதியா நான் காணாமல் போனதை பலரும் கவனித்து இருக்கின்றனர். அதனால் நான் காணாமல் போகவில்லை என்று கூறுகிறார். பின்னர் ஏதோ ஒன்று நடக்கவும் சின்ன பொண்ணு அக்ஷரா உடன் சேர்ந்து கதறி கதறி அழுகிறார். இதனால் சின்ன பொண்ணு இந்த போட்டியில் இருந்து விலகுவாரா என்பது போன்ற வதந்திகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. யார் வெளியேறுவார்கள் என்பது பற்றி இன்றைய நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிடும்.