‘பாரதி கண்ணம்மா’ விலகல் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோஷினி? இன்ஸ்டா தகவல்!

0
'பாரதி கண்ணம்மா' விலகல் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோஷினி? இன்ஸ்டா தகவல்!
'பாரதி கண்ணம்மா' விலகல் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோஷினி? இன்ஸ்டா தகவல்!
‘பாரதி கண்ணம்மா’ விலகல் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோஷினி? இன்ஸ்டா தகவல்!

கடந்த சில நாட்களாக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து நடிகை ரோஷினியின் விலகல் குறித்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது இன்ஸ்டா பயோ பக்கத்தில் விஜய் டிவி ஹேஷ்டேகை இணைத்துள்ளார் நடிகை ரோஷினி.

நடிகை ரோஷினி

மீடியா துறைக்குள் ஒரு விளம்பர மாடலாக அடியெடுத்து வைத்து தற்போது பல வீடுகளில் ஒரு மகளாக, மருமகளாக, அக்காவாக மாறி இருப்பவர் நடிகை ரோஷினி. திரைத்துறைக்கு ஏற்ற வழக்கமான பாணியை மாற்றி, மீடியாவால் ஒதுக்கப்படும் நிறத்தை கொண்ட நடிகை ரோஷினியை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தது ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தான். இந்த சீரியலின் பெயருக்கு ஏற்றார் போல மென்மையான அதே நேரத்தில் தைரியமிக்க கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார் கண்ணம்மா.

கதிர் – முல்லை காதல் காட்சிகளுடன் வெளியான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ – உற்சாகத்தில் ரசிகர்கள்!

அந்த வகையில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பயணித்து வரும் நடிகை ரோஷினிக்கு ஏகப்பட்ட ஃபேன் பேஸ் உண்டு. இப்படி இருக்க கடந்த சில நாட்களாக நடிகை ரோஷினி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலக இருப்பதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதாவது நடிகை ரோஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பயோவில் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா ஹேஷ்டேகை சமீபத்தில் நீக்கி இருந்தார்.

‘பாரதி கண்ணம்மா’ வெண்பாவிற்கு வந்த நறுக் கமெண்ட் – இன்ஸ்டாகிராம் வீடியோ வெளியீடு!

இதனால் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து நடிகை ரோஷினி விலக இருப்பதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் காட்டுதீயாக பரவியது. இந்நிலையில் நடிகை ரோஷினி தனது இன்ஸ்டாகிராம் பயோவில் பாரதி கண்ணம்மா ஹேஷ்டேகை மீண்டுமாக இணைத்துள்ளார். அதனால் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து நடிகை ரோஷினி விலகுவதாக வெளியான செய்தி வதந்தி என்றும், கண்ணம்மா கதாப்பாத்திரத்தில் அவரே தொடர்ந்து நீடிப்பார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!