ஹேமா & லட்சுமிக்கு சொல்லி கொடுக்கும் கண்ணம்மா, பாரதி – வெளியான ப்ரோமோ!

0
ஹேமா & லட்சுமிக்கு சொல்லி கொடுக்கும் கண்ணம்மா, பாரதி - வெளியான ப்ரோமோ!
ஹேமா & லட்சுமிக்கு சொல்லி கொடுக்கும் கண்ணம்மா, பாரதி - வெளியான ப்ரோமோ!
ஹேமா & லட்சுமிக்கு சொல்லி கொடுக்கும் கண்ணம்மா, பாரதி – வெளியான ப்ரோமோ!

விஜய் தொலைக்காட்சியில் தற்போது மக்கள் விரும்பும் காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், “பாரதி கண்ணம்மா”. இந்த சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

சீரியல் ப்ரோமோ:

விஜய் டிவியில் தற்போது டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், பாரதி கண்ணம்மா. இதில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் தங்களது பெற்றோர்களையும் மீறி திருமணம் செய்து கொள்கின்றனர். ஆரம்பத்தில் கண்ணம்மாவை அவரது நிறத்தினை காட்டி வெறுக்கும் அவரது மாமியார் சௌந்தர்யா பின்னர் கண்ணம்மாவின் உண்மை குணம் அறிந்து அவரை விரும்பி விடுகிறார். இப்படியாக இருக்க, கண்ணம்மா கர்ப்பமானதும் பாரதி சந்தேகம் அடைந்து விடுகிறார். இதனை அறியும் கண்ணம்மா அவரை விட்டு பிரிந்து விடுகிறார்.

பாரதி கண்ணம்மா சீரியல் கலாட்டா – சௌந்தர்யா பாட்டியை கலாய்க்கும் ஹேமா!

பின்னர், இரு பெண் குழந்தைகளை கண்ணம்மா பெற்றெடுக்கிறார். அதில் ஒரு குழந்தையை கண்ணம்மாவிற்கு தெரியாமல் சௌந்தர்யா மற்றும் வேணு இருவரும் எடுத்து வந்து வளர்த்து வருகின்றனர். தற்போது ஹேமாவிற்கு உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் அவர் கண்ணம்மா வீட்டில் லட்சுமி உடன் இருக்கிறார். அதே போல் சில காரணங்களால் பாரதியும் கண்ணம்மா மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. இதனால் நால்வரும் ஒரே வீட்டில் இருக்கின்றனர்.

இதனால் பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்குமான காதல் காட்சிகளுடன், நால்வரும் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டு வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதில் கண்ணம்மா ஹேமா மற்றும் லட்சுமி இருவருக்கும் “குட் டச், பேட் டச்” பற்றி சொல்லி கொடுக்கிறார். இந்த விஷயத்தில் இருவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று ஒரு தாயாக அவர் வலியுறுத்துகிறார். இதனை கேட்கும் பாரதி, கண்ணம்மாவை மெச்சும் பார்வை பார்த்து விட்டு குழந்தைகளுக்கு மேலும் சில அறிவுரைகளை வழங்குகிறார். வெறும் காதல் காட்சிகளுடன் மட்டுமல்லாமல், சமூக கருத்துடன் இந்த ப்ரோமோ வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!