பாரதி கண்ணம்மா சீரியல் கலாட்டா – சௌந்தர்யா பாட்டியை கலாய்க்கும் ஹேமா!

0
பாரதி கண்ணம்மா சீரியல் கலாட்டா - சௌந்தர்யா பாட்டியை கலாய்க்கும் ஹேமா!
பாரதி கண்ணம்மா சீரியல் கலாட்டா - சௌந்தர்யா பாட்டியை கலாய்க்கும் ஹேமா!
பாரதி கண்ணம்மா சீரியல் கலாட்டா – சௌந்தர்யா பாட்டியை கலாய்க்கும் ஹேமா!

பாரதி கண்ணம்மா சீரியலில் பாட்டியாக நடித்து வருபவர் ரூபா ஸ்ரீ. இதே சீரியலில் பேத்தியாக நடித்து வரும் ஹேமாவுடன் இணைந்து இவர்ஷூட்டிங்க்கு நடுவே செய்திருக்கும் காமெடி வீடியோ ரசிகர்களால் இன்ஸ்டாகிராமில் லைக் செய்யப்பட்டு வருகிறது.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவி பிரபல சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் ஒன்றாக உள்ளது. இந்த சீரியலில் பாரதியாக அருண் என்பவரும், கண்ணம்மாவாக ரோஷினி என்பவரும் நடித்து வருகின்றனர். பாரதியின் அம்மா சௌந்தர்யா கதாபாத்திரத்தில் ரூபா ஸ்ரீ நடிக்கிறார். பாரதி மற்றும் கண்ணம்மாவின் குழந்தைகளாக லிசா ராஜ்குமார் மற்றும் ரக்‌ஷா ஷ்யாம் நடித்து வருகின்றனர்.

விஜய் டிவி ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் இருந்து விலகும் நடிகை – வெளியான தகவல்!

இந்த சீரியல் மற்ற சீரியல்களை பின்னுக்கு தள்ளி தொடர்ந்து ரேட்டிங்கில் முன்னிலை வகித்து வருகிறது. வில்லி வெண்பாவாக ஃபரினா நடிக்கிறார். 8 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர் பாரதியும், கண்ணம்மாவும்.. முதலில் நிறத்தால் புறக்கணிக்கப்படுகிறார் கண்ணம்மா. பாரதி காட்டும் அன்பின் காரணமாக அவரது வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கிறது. இவர்களுக்கு இடையே வெண்பா வருகிறார்.

TN Job “FB  Group” Join Now

இவர்கள் இருவரையும் பிரிக்க, கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தை பிறக்கிறது. ஒரு குழந்தை அம்மாவிடமும், மற்றொரு குழந்தை அப்பாவிடமும் வளருகிறது. இப்படியான சூழ்நிலையில், கண்ணம்மாவும் பாரதி, ஹேமா, லட்சுமி ஒரே வீட்டில் தாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான கதையில் ஹேமாவாக நடிக்கும் லிசாவும், அவரது பாட்டியாக நடிக்கும் ரூபா ஸ்ரீயும், ஷூட்டிங்க்கு நடுவே செய்திருக்கும் காமெடி வீடியோ ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், கவுண்டமணியின் காமெடி சீசனுக்கு இருவரும் நடித்திருப்பார்கள். அந்த வீடியோவில் பாட்டியை கலாய்க்கும் வகையில் ஹேமா காமெடி செய்திருப்பார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!