‘நீ என்னோட பொண்ணு தான்’, ஹேமாவிடம் உண்மையை கூறும் கண்ணம்மா – வெளியான ப்ரோமோ!!

0
'நீ என்னோட பொண்ணு தான்', ஹேமாவிடம் உண்மையை கூறும் கண்ணம்மா - வெளியான ப்ரோமோ!!
'நீ என்னோட பொண்ணு தான்', ஹேமாவிடம் உண்மையை கூறும் கண்ணம்மா - வெளியான ப்ரோமோ!!
‘நீ என்னோட பொண்ணு தான்’, ஹேமாவிடம் உண்மையை கூறும் கண்ணம்மா – வெளியான ப்ரோமோ!!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் கண்ணம்மா ஹேமா பற்றிய உண்மையை கூறி விடுகிறார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல்

விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் எப்போதுமே முதல் இடத்தில் இருப்பது, பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியலில் தற்போது முக்கிய கட்டமாக கண்ணம்மாவிற்கு ஹேமா தான் தனது இரண்டாவது குழந்தை என்று சௌந்தர்யா மூலம் தெரிய வருகிறது. இதனால் பாரதி குடும்பத்தினர் மீது கோபமாக இருக்கும் கண்ணம்மா தனது மகளை தன்னுடன் அழைத்து செல்வதில் உறுதியாக இருக்கிறார். அதே போல் தனக்கு உண்மை தெரிந்து விட்டது என்பதை பற்றி வெண்பாவிடமும் அவர் காட்டி கொள்ளவில்லை. இப்படியாக இருக்க, இந்த சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

மீண்டும் சமையல் போட்டியில் கலந்து கொள்ளும் சந்தியா – “ராஜா ராணி 2” அடுத்த எபிசோட்!

அதில் கண்ணம்மா பாரதியின் வீட்டிற்கு வருகிறார். அப்போது கண்ணம்மாவை பார்த்து விட்டு குடும்பத்தினர் அனைவரும் பதறுகின்றனர். கண்ணம்மா தான் ஹேமாவை கோவிலுக்கு அழைத்து செல்ல இருப்பதாக கூறுகிறார். அப்போது அனைவரும் பாரதி என்ன கூற போகிறாரோ என்று பயப்படுகின்றனர். சரியாக அப்போது பாரதி மற்றும் ஹேமா இருவரும் மாடியில் இருந்து கீழே வருகின்றனர். கண்ணம்மாவை பார்த்ததும் ஹேமா மகிழ்ச்சியில் ஆர்பரிக்கிறார்.

“பாரதி கண்ணம்மா” சீரியலில் ஹேமாவும், லட்சுமியும் இணைந்து செய்த ரீல்ஸ் – குவியும் லைக்குகள்!

கண்ணம்மா கோவிலுக்கு அழைத்து செல்வது குறித்து கூறியதும், பாரதி அதிசயமாக சரி என்று கூறி விடுகிறார். பின்னர், ஹேமா, கண்ணம்மா மற்றும் லட்சுமி மூவரும் கோவிலுக்கு செல்லுகின்றனர். ஹேமா திடிரென்று எதற்காக கோவிலுக்கு செல்லுகிறோம் என்று கண்ணம்மாவிடம் கேட்க, அதற்கு கண்ணம்மா நீயும் என் பெண் தான் என்று கூறி ஹேமாவை குழப்புகிறார். இதனால் அடுத்து வரும் எபிசோடுகளில் கண்ணம்மா தான் தனது அம்மா என்று ஹேமாவிற்கு தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!