“பாரதி கண்ணம்மா” சீரியலில் ஹேமாவும், லட்சுமியும் இணைந்து செய்த ரீல்ஸ் – குவியும் லைக்குகள்!

0
"பாரதி கண்ணம்மா" சீரியலில் ஹேமாவும், லட்சுமியும் இணைந்து செய்த ரீல்ஸ் - குவியும் லைக்குகள்!
“பாரதி கண்ணம்மா” சீரியலில் ஹேமாவும், லட்சுமியும் இணைந்து செய்த ரீல்ஸ் – குவியும் லைக்குகள்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், இரட்டை குழந்தைகள் கதாபாத்திரமான ஹேமா லட்சுமி ஒன்றாக இணைந்து ரீலிஸ் வீடியோ செய்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியலில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் பாரதிக்கும், கண்ணம்மாவிற்கும் பிறந்த இரட்டை குழந்தைகளை வைத்து தற்போது கதை சென்று கொண்டிருக்கிறது. இரட்டை குழந்தைகளை பிரித்த சௌந்தர்யா, ஒரு குழந்தையை பாரதியிடம் கொடுத்து வளர்க்கிறார். 8 வருடங்களுக்கு பின் கண்ணம்மாவிற்கு உண்மை தெரிய வருகிறது.

மீண்டும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்கும் சூப்பர் சிங்கர் பிரபலம் – ரசிகர்கள் உற்சாகம்!

இந்நிலையில் கண்ணம்மா இன்னும் 4 நாட்களில் என் குழந்தையை கொடுக்க வேண்டும் என கொடு வைத்திருக்கிறார். ஆனால் சௌந்தர்யாவிடம் பாரதி பேச ஹேமா என்னை விட்டு பிரிந்தால் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என சொல்கிறார். அதனால் என்ன செய்வது என தெரியாமல் சௌந்தர்யா இருக்கிறார். கண்ணம்மா தன்னுடைய மகள் கிடைத்த சந்தோஷத்தில் கோவிலுக்கு அழைத்து செல்கிறார். ஆனால் பாரதி நடப்பது எதுவும் புரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 போட்டியாளர்களிடையே கடும் வாக்குவாதம் – வெளியான அதிரடி ப்ரோமோ!

நாளைய எபிசோடில் சௌந்தர்யாவிடம் பாரதி, கண்ணம்மா பற்றி கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கண்ணம்மா நீயும் எனக்கு மகள் தான் என சொல்லி சமாளிக்கிறார். இந்த சீரியலில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் ஹேமாவும், லக்ஷ்மியும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் இணைந்து இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதை லட்சுமியாக நடிக்கும் ரக்சா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு பல லைக்குகள் குவிந்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here