பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து அதிகாரபூர்வமாக விலகிய பரினா – உறுதி செய்த துணை நடிகை!

0
பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து அதிகாரபூர்வமாக விலகிய பரினா - உறுதி செய்த துணை நடிகை!
பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து அதிகாரபூர்வமாக விலகிய பரினா - உறுதி செய்த துணை நடிகை!
பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து அதிகாரபூர்வமாக விலகிய பரினா – உறுதி செய்த துணை நடிகை!

பாரதி கண்ணம்மா தொடரில் வில்லியாக நடித்து வரும் ஃபரீனா தற்போது சீரியலில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விலகிய வெண்பா:

பாரதி கண்ணம்மா தொடர் தற்போது விஜய் டிவியின் முக்கிய தொடராகவும், தொடர்ந்து நம்பர் 1ம் இடத்திலும் இருந்து வருகிறது. டிஆர்பி யை தொடர்ந்து முதலிடத்தில் தக்க வைப்பதற்கான வகையில் கதைக்களம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் வெறுத்து ஒதுக்கும் கண்ணம்மாவை மிகவும் விரும்பி திருமணம் செய்து கொள்ளும் பாரதி, அதன் பிறகு அவரது தோழி செய்யும் சதியினால் கண்ணம்மாவை விட்டு பிரிகிறார். அதன் பிறகு நடக்கும் கதை தான் பாரதி கண்ணம்மா தொடர்.

பாரதியால் தற்கொலைக்கு முயற்சிக்கும் கண்ணம்மா? சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்! ரசிகர்கள் ஷாக்!

தற்போது வில்லி வெண்பா வேடத்தில் நடித்து வரும் ஃபரீனா நிஜ வாழ்கையில் கர்ப்பமாக உள்ளார். நிறை மாத நிலையிலும் அவர் தொடரில் இருந்து விலகாமல் கடினமான காட்சிகளில் கூட நடித்து வந்தார். இதனால் இவருக்கு பாராட்டுக்கள் ஒரு பக்கம் கிடைத்தாலும், மறுபுறம் இந்த நிலையிலும் பணத்திற்காக இப்படி நடிக்க வேண்டுமா என்று கருத்து தெரிவித்து வந்தனர். இதை எதையும் கண்டுகொள்ளாமல் தனது வேலையை ஃபரீனா வழக்கம் போல் செய்து வந்தார்.

கர்ப்பமாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால்? அவரே அளித்த விளக்கம்!

இந்நிலையில், தற்போது ஃபரீனாவிற்கு 8 மாதமாக உள்ளதால் நிச்சயம் ஓய்வு தேவை என்பதால் அவர் தொடரில் இருந்து விலக இருப்பதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. ஆனால் அப்படி இருக்காது என்று என்று கருதி வந்த நிலையில், தற்போது வெண்பாவின் வீட்டு வேலைக்காரியாக நடித்து வரும் புஷ்பா கதாபாத்திரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மிஸ் யூ பரீனா என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் ஃபரீனா பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து அதிகாரபூர்வமாக விலகியுள்ளதாக உறுதியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!