‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரீல் ஜோடி அருண் & ரோஷினிக்கு பிறந்தநாள் – குவியும் வாழ்த்துக்கள்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியல் ரீல் ஜோடி அருண் & ரோஷினிக்கு பிறந்தநாள் - குவியும் வாழ்த்துக்கள்!
'பாரதி கண்ணம்மா' சீரியல் ரீல் ஜோடி அருண் & ரோஷினிக்கு பிறந்தநாள் - குவியும் வாழ்த்துக்கள்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரீல் ஜோடி அருண் & ரோஷினிக்கு பிறந்தநாள் – குவியும் வாழ்த்துக்கள்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்து வரும் நடிகர் அருண் பிரசாத் மற்றும் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் இருவரும் இன்று (நவ.30) தங்களது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், ரசிகர்களும் வலைதளங்கள் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிறந்தநாள் கொண்டாட்டம்

விஜய் டிவியின் TRP ரேட்டிங் கிங்காக கருதப்படும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மக்களின் பேவரைட் ஆக இருந்து வருகிறது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு நடிகர், நடிகைகளும் சின்னத்திரைக்கு புதிய முகங்களே என்றாலும் அவர்களுக்கும் மக்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்புகள் கிடைத்து வருகிறது.

வசு பற்றிய உண்மையை கார்த்திக்கிடம் சொன்ன ஹேமா, முதலிரவிற்கு தயாராகும் மணமக்கள் – இன்றைய “தமிழும் சரஸ்வதியும்” எபிசோட்!

அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதியாக நடித்து வரும் நடிகர் அருண் பிரசாத் மற்றும் கண்ணம்மாவாக நடித்திருந்த நடிகை ரோஷினி ஹரிப்ரியனுக்கும் சொல்லக்கூடிய அளவுக்கு ஃபேன் ஃபாலோயிங் இருக்கிறது. அதுவும் இந்த சீரியலின் ஆரம்பகாலத்தில் ஒளிபரப்பான பாரதி, கண்ணம்மாவின் கெமிஸ்ட்ரி மூலமே பல ரசிகர்கள் உருவானார்கள். இப்படி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக பயணித்து வந்த இந்த ரீல் ‘பாரதி கண்ணம்மா’ ஜோடிக்கு இடையே ஒரு பிரிவு ஏற்பட்டிருக்கிறது.

அதாவது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து எதிர்பாராதவிதமாக நடிகை ரோஷினி ஹரிப்ரியன் சமீபத்தில் விலகி இருக்கிறார். என்றாலும் நடிகர் அருண் மற்றும் நடிகை ரோஷினிக்கு கொடுத்து வந்த ஆதரவை அவர்களது ரசிகர்கள் தொடர்ந்து கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ‘பாரதி கண்ணம்மா’ ரீல் ஜோடிகளான அருண் மற்றும் ரோஷினி இருவரும் சேர்ந்து இன்று (நவ.30) தங்களது பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.

பாக்கியா குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடும் அமிர்தா குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட் !

ஒவ்வொரு வருடமும் படப்பிடிப்பு தளத்தில் வைத்து கேக் வெட்டி வெகு விமரிசையாக பிறந்தநாளை கொண்டாடும் இவர்கள் இருவரும் இன்று வெவ்வேறு இடங்களில் இருக்கின்றனர். இருந்தாலும் இதற்கு முன்னால் அருண் மற்றும் ரோஷினி இருவருக்கும் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டங்கள், இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என அனைத்தையும் எடிட் செய்து இந்த ரீல் ஜோடிக்கு ரசிகர்கள் வலைதளங்கள் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!