பிரசவத்திற்கு பின் “பாரதி கண்ணம்மா” வெண்பா வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்!

0
பிரசவத்திற்கு பின்
பிரசவத்திற்கு பின் "பாரதி கண்ணம்மா" வெண்பா வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்!
பிரசவத்திற்கு பின் “பாரதி கண்ணம்மா” வெண்பா வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் இளம் வில்லியாக நடித்த பரீனாவிற்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், முதன்முறையாக குழந்தை பிறப்பிற்கு பின் அவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா தமிழ் சீரியல்களில் தொடர்ந்து டாப் வரிசையில் இருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் சிறிய கதாபாத்திரம் முதல் மக்களிடம் நல்ல பிரபலமாக இருக்கின்றனர். அந்த வகையில் கதைக்கு அனைத்து கதாபாத்திரங்களும் முக்கியமாக இருக்கிறது. மேலும் பாரதி கண்ணம்மா குடும்ப வாழ்க்கையை வில்லி வெண்பா கெடுப்பதே சீரியலின் கதையாக இருக்கிறது. இந்த சீரியலின் வில்லியாக வெண்பா காதாபாத்திரத்தில் நடிகை பரீனா நடித்து வருகிறார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரீல் ஜோடி அருண் & ரோஷினிக்கு பிறந்தநாள் – குவியும் வாழ்த்துக்கள்!

கர்ப்பமாக இருப்பது தெரிந்தது முதல் அவர் குழந்தை பிறப்பிற்கு ஒரு வாரம் முன்னர் வரை தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். அதனால் பலர் அவரது தைரியத்தை பாராட்டி வந்தனர். மேலும் சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக அவர் யோகா உடற்பயிற்சிகள் செய்வது குறித்த வீடியோக்களை பதிவிட்டார். அது மற்ற பெண்களுக்கு நல்ல ஊக்குவிப்பாக இருந்தது. அதை தொடர்ந்து பரீனாவிற்கு கடந்த 16 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அனைவரும் எதிர்பார்த்தது போல சுகபிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பாக்கியா குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடும் அமிர்தா குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட் !

அதனால் பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். குழந்தை முகத்தை காட்ட வேண்டும் என தொடர்ந்து ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பிரசவத்திற்கு பின் பரீனா புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவரது அழகு குறைந்துள்ளதாக பல கமெண்ட்ஸ் வந்துள்ளது. ஆனால் பரீனா மீண்டும் பழைய பொலிவுடன் வருவார் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!