சேமிப்பு கணக்கிற்கு அதிக வட்டி தரும் வங்கிகள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
சேமிப்பு கணக்கிற்கு அதிக வட்டி தரும் வங்கிகள் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
சேமிப்பு கணக்கிற்கு அதிக வட்டி தரும் வங்கிகள் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
சேமிப்பு கணக்கிற்கு அதிக வட்டி தரும் வங்கிகள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

தற்போதைய நிலையில், நமது பணத்தை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்வதும் பாதுகாப்பான வங்கியில் சேமிப்பதும் மிகவும் சிரமமான செயலாக மாறியுள்ளது. அந்த வகையில் நாம் சேமிக்கும் பணத்திற்கு அதிக வட்டி தரும் வங்கிகளின் விவரங்களை இந்த பதிவில் காண்போம்.

சேமிப்பு கணக்கு:

பணத்தை சேமிப்பதற்கு பல எளிய முறைகள் தற்போது வந்து விட்டாலும், நாம் சேமித்த பணத்தை எங்கு பாதுகாப்பது என்பது பெரிய குழப்பமாக உள்ளது. வங்கிகளில் பணத்தை நிலையான வைப்பு நிதி கணக்கு மூலம் அதிமானோர் பணத்தை சேமிப்பார்கள். அதற்கு வங்கி சார்பில் ஒரு குறிப்பிட்ட அளவு வட்டி விகிதம் வழங்கப்படும். ஆனால் சேமிப்பு கணக்கிற்கு என்று எந்த வங்கியும் ஒரு நல்ல அளவிலான வட்டியை வழங்குவதில்லை. மிகவும் குறைந்த அளவிலான வட்டி மட்டுமே வழங்கப்படும்.

அண்ணா பல்கலை துணைவேந்தர் நியமனம் – ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை!

ஆனாலும் சில தனியார் வங்கிகளில் சேமிப்பு கணக்கிற்கு தற்போது சற்று அதிகமான அளவில் வட்டி வழங்கப்படுகிறது. எந்தெந்த வங்கிகளில் எத்தனை சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது என்றும், அந்த வங்கிகளின் குறைந்தபட்ச இருப்பு குறித்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டிசிபி வங்கி

டிசிபி வங்கியில் வட்டி விகிதம் 6.75% வழங்கப்படுகிறது. இங்கு மினிமம் பேலன்ஸ் ரூ.2500 முதல் ரூ.5000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

பந்தன் பேங்க்

பந்தன் வங்கியில் 6% வரை சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி வழங்கப்படுகிறது. இங்கு மினிமம் பேலன்ஸ் 5000 ரூபாயாகும்.

RBL வங்கி

ஆர்பிஎல் வங்கியில் சேமிப்பு கணக்குகளுக்கு 6.25% வரையில் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வங்கியில் மினிமம் பேலன்ஸ் ரூ.2500 – 5000 ஆகும்.

இந்தஸ்இந்த் வங்கி

இந்தஸ்இந்த் வங்கியில் 5% வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்த வங்கியிலும் மினிமம் பேலன்ஸ் தொகையானது 1500 – 10,000 ரூபாயாகும்.

YES வங்கி

யெஸ் வங்கியில் சேமிப்பு கணக்குகளுக்கு 5.25% வரை வட்டி வழங்கப்படுகிறது. ஆனால் யெஸ் வங்கியில் மினிமம் பேலன்ஸ் ரூ.10,000 முதல் ரூ.25,000 ஆகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!