ஏப்ரல் 14 முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் முழு அடைப்பு – எந்தெந்த மாநிலங்களுக்கு? விடுமுறை பட்டியல் இதோ!

0
ஏப்ரல் 14 முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் முழு அடைப்பு - எந்தெந்த மாநிலங்களுக்கு? விடுமுறை பட்டியல் இதோ!
ஏப்ரல் 14 முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் முழு அடைப்பு - எந்தெந்த மாநிலங்களுக்கு? விடுமுறை பட்டியல் இதோ!
ஏப்ரல் 14 முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் முழு அடைப்பு – எந்தெந்த மாநிலங்களுக்கு? விடுமுறை பட்டியல் இதோ!

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஏப்ரல் மாதத்தின் 2வது வாரத்தில் தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு நாட்காட்டியையும் இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

வங்கி விடுமுறைகள்

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விடுமுறை நாட்காட்டியின்படி, பல்வேறு பண்டிகைகள் காரணமாக நாளை (ஏப்ரல் 14) முதல் ஏப்ரல் 17 வரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைகள் பேச்சுவார்த்தை கருவிகள் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இந்த வங்கி விடுமுறைகள் வித்தியாசமானதாக இருக்கும் என்பதை வாடிக்கையாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், இந்த 4 நாட்களில் ஒரு சில நாட்களுக்கு இந்தியா முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

TNPSC குரூப் 7 A தேர்வு நுழைவுச்சீட்டு – வெளியீடு !

ஏற்கனவே, ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வாரத்தில் மட்டும் தான் அதிகபட்சமான விடுமுறைகள் வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் 14 அன்று டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி, மஹாவீர் ஜெயந்தி, பைசாகி, வைசாகி, தமிழ் புத்தாண்டு தினம், சீராபா, பிஜு விழா, போஹாக் பிஹு உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி அகர்தலா, அகமதாபாத், பேலாப்பூர், பெங்களூரு, புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டேராடூன், காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பனாஜி, ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்படும்.

தமிழக அரசு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் 76 லட்சம் பேர் – ஷாக் ரிப்போர்ட்!

குறிப்பாக மேகாலயா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் இந்த நாளில் விடுமுறை அளிக்கப்படாது. தொடர்ந்து ஏப்ரல் 15 அன்று புனித வெள்ளி, பெங்காலி புத்தாண்டு தினம், ஹிமாச்சல் நாள், விஷு, போஹாக் பிஹு பண்டிகையை முன்னிட்டு ராஜஸ்தான், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் தவிர மற்ற பகுதிகளில் வங்கிகள் மூடப்படும். ஏப்ரல் 16 சனிக்கிழமை மற்றும் ஏப்ரல் 17 ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு வங்கிகள் அடைக்கப்படும். இதனை தொடர்ந்து ஏப்ரல் 21 கரியா பூஜை காரணமாகவும், ஏப்ரல் 29 – ஷப்-இ-கத்ர் காரணமாகவும் வங்கிகள் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

NPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!