அக்டோபர் மாதத்தில் 21 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை – முழு பட்டியல் வெளியீடு!

0
அக்டோபர் மாதத்தில் 21 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை - முழு பட்டியல் வெளியீடு!
அக்டோபர் மாதத்தில் 21 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை - முழு பட்டியல் வெளியீடு!
அக்டோபர் மாதத்தில் 21 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை – முழு பட்டியல் வெளியீடு!

அடுத்து வரவுள்ள அக்டோபர் மாதத்திற்கான ரிசர்வ் வங்கியின் (RBI) அதிகாரப்பூர்வ வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலின்படி, கிட்டத்தட்ட 21 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை

நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தொற்றுக்கு மத்தியில் வங்கிகள் சுமார் 3 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து தற்போது நோய் பரவல் கட்டுக்குள் வந்ததும், வங்கிகள் அனைத்தும் மீண்டுமாக செயல்பட துவங்கியுள்ளது. இதற்கு இடையில் மாதந்தோறும் வங்கிகளுக்கு வழங்கப்படும் சில விடுமுறைகள் மூலம் வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியான வங்கி சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாமல் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

அந்த வகையில் அடுத்து வரவிருக்கும் அக்டோபர் மாதத்திலும் குறிப்பிட்ட சில நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என்பதையும் வாடிக்கையாளர்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது அக்டோபர் மாதத்திற்கான ரிசர்வ் வங்கியின் (RBI) அதிகாரப்பூர்வ வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலின்படி, சுமார் 21 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது வரவிருக்கும் அக்டோபர் மாதம் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகைகளால் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு போலீசார் அதிரடி – ஒரே இரவில் 560 ரவுடிகள் கைது! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

ரிசர்வ் வங்கியின் விடுமுறை நாட்களின் பட்டியலில் மாநில வாரியான கொண்டாட்டங்கள், மத விடுமுறைகள் மற்றும் பண்டிகைக் கொண்டாட்டங்களும் அடங்கும். அதனால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில் முன்னமே திட்டமிட்டு வங்கி சேவைகளை தடையில்லாமல் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ரிசர்வ் வங்கி உத்தரவின் படி அக்டோபர் மாதத்திற்கான முழு விடுமுறை நாட்களின் பட்டியல் இங்கே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ்,

அக்டோபர் 1 – வங்கிக் கணக்குகளின் அரை ஆண்டு நிறைவு காரணமாக கேங்டாக் பகுதியில் வங்கிகள் மூடப்படும்.

அக்டோபர் 2 – மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் வங்கிகள் செயல்படாது.

அக்டோபர் 3 – ஞாயிறு, பொது விடுமுறை.

அக்டோபர் 6 – மஹாளய அமாவாஸ்யே தினத்தை முன்னிட்டு அகர்தலா, பெங்களூரு, கொல்கத்தாவில் வங்கிகள் செயல்படாது.

அக்டோபர் 7 – லைனிங்தோ சனமஹி காரணமாக இம்பால் பகுதியில் வங்கிகள் மூடப்படும்.

அக்டோபர் 9 – 2 வது சனிக்கிழமை, விடுமுறை நாள்.

அக்டோபர் 10 – ஞாயிறு, பொது விடுமுறை.

அக்டோபர் 12 – துர்கா பூஜையை முன்னிட்டு அகர்தலா, கொல்கத்தாவில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

அக்டோபர் 13 – துர்கா பூஜையை முன்னிட்டு அகர்தலா, புவனேஸ்வர், காங்டாக், கவுகாத்தி, இம்பால், கொல்கத்தா, பாட்னா, ராஞ்சி பகுதிகளில் வங்கிகள் மூடப்படும்.

அக்டோபர் 14 – துர்கா பூஜை அல்லது தசரா, ஆயுத பூஜை ஆகியவற்றை தொடர்ந்து அகர்தலா, பெங்களூரு, சென்னை, கேங்டாக், கவுகாத்தி, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, பாட்னா, ராஞ்சி, ஷில்லாங், ஸ்ரீநகர், திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்படும்.

அக்டோபர் 15 – துர்கா பூஜை மற்றும் தசரா, விஜய தஷமி காரணமாக இம்பால் மற்றும் சிம்லாவை தவிர மற்ற மாநிலங்களில் இருக்கும் அனைத்து வங்கிகளும் மூடப்படும்.

அக்டோபர் 16 – துர்கா பூஜை காரணமாக கேங்டாக் பகுதியில் வங்கிகள் செயல்படாது.

அக்டோபர் 17 – ஞாயிறு, பொது விடுமுறை.

அக்டோபர் 18 – கதி பிஹு காரணமாக கவுகாத்தியில் வங்கிகள் செயல்படாது.

அக்டோபர் 19 – ஐடி-இ-மீலாத் மற்றும் ஈத்-இ-மீலாதுன்னாபி காரணமாக அகமதாபாத், பெலாப்பூர், போபால், சென்னை, டேராடூன், ஹைதராபாத், இம்பால், ஜம்மு, கான்பூர், கொச்சி , லக்னோ, மும்பை, நாக்பூர், டெல்லி, ராய்பூர், ராஞ்சி, ஸ்ரீநகர், திருவனந்தபுரம் பகுதிகளில் வங்கிகள் மூடப்படும்.

அக்டோபர் 20 – மகரிஷி வால்மீகியின் பிறந்த நாள், லட்சுமி பூஜையை முன்னிட்டு அகர்தலா, பெங்களூரு, சண்டிகர், கொல்கத்தா, சிம்லா பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை.

அக்டோபர் 22 – ஈத்-இ-மீலாத்-உல்-நபியை முன்னிட்டு ஜம்மு, ஸ்ரீநகர் பகுதிகளில் வங்கிகள் மூடப்படும்.

அக்டோபர் 23 – 4 வது சனிக்கிழமை, விடுமுறை நாள்.

அக்டோபர் 24 – ஞாயிறு, பொது விடுமுறை.

அக்டோபர் 26 – சேர்க்கை நாளை முன்னிட்டு ஜம்மு, ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்படும்.

அக்டோபர் 31 – ஞாயிறு, பொது விடுமுறை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!