இன்று முதல் 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – விவரங்கள் இங்கே!
ஜூன் 25ம் தேதியான இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை நாட்டில் 4 நாட்கள் பல்வேறு காரணங்களினால் வங்கிகளுக்கு விடுமுறை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களை பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வங்கி விடுமுறை:
பொது மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கு ஜூன் மாதத்தில் மொத்தம் 9 நாட்கள் விடுமுறையாக உள்ளது. விழாக்கள் மற்றும் வார இறுதி நாட்கள் காரணமாக நாடு முழுவதும் பல வங்கிகள் 4 நாட்கள் மூடப்படும். இந்திய ரிசர்வ் வங்கி வலைத்தளம் ஜூன் மாதத்தில் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பண்டிகைகள் காரணமாக மூன்று விடுமுறை நாட்களைக் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்ளுக்கு மதிப்பெண் வழங்கல் – வெளியான முக்கிய அறிவிப்பு!
ஜூன் 25ம் தேதியான இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் மாறுபடுகின்றது. நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் இந்த விடுமுறை நாட்கள் பொருந்துவதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில், நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் விடுமுறை அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 23 மாவட்டங்களில் பேருந்து சேவைகள்? முதல்வர் ஆலோசனை!
விடுமுறை நாட்கள்:
- ஜூன் 25 – குரு ஹர்கோபிந்த் ஜியின் பிறந்த நாள் (ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் வங்கி மூடல்)
- ஜூன் 26 – இரண்டாவது சனிக்கிழமை
- ஜூன் 27 – ஞாயிறு வார விடுமுறை
- ஜூன் 30 – ரெம்னா நி (வங்கிகள் இஸ்வாலில் மட்டுமே மூடப்படும்)
எந்த மூலையிலோ விடுமுறை விடுவதை பெரிய செய்தியாக தமிழ்நாட்டில் விடுமுறை மாதிரி வெளியிடுவது நியாயமா?