தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்ளுக்கு மதிப்பெண் வழங்கல் – வெளியான முக்கிய அறிவிப்பு!

1
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்ளுக்கு மதிப்பெண் வழங்கல் - வெளியான முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்ளுக்கு மதிப்பெண் வழங்கல் - வெளியான முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்ளுக்கு மதிப்பெண் வழங்கல் – வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் அறிக்கை வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிளஸ் 2 மதிப்பெண்:

தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் அனைத்தும் மூடிய நிலையில் இருந்து வருகிறது. மாணவர்களை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தில் நடைபெறவிருந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டார். இந்த அறிவிப்பு தமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தது. இதனை தொடர்ந்து பிளஸ் 2 மாணவர்களுக்கு எந்த முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ssc

இது குறித்து ஆராய பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போது இந்த குழு ஆலோசனை மேற்கொண்டு 5 வகையான மதிப்பீட்டு வழிமுறைகளை தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு போல் 10, 11 ஆம் வகுப்பு இறுதி தேர்வு மதிப்பெண்களுடன் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் பேருந்து சேவைகள்? முதல்வர் ஆலோசனை!

ஏற்கனவே 12 ஆம் வகுப்பு மாணவர்களின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களை தேர்வுத்துறை கோரிய நிலையில், 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் இருந்து அதிகளவில் மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு இது குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டு இன்னும் ஓரிரு தினங்களில் மதிப்பெண் கணக்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Naanga yidhuku Corona vuka setthe pogalam,plz 12th revision mark mattu podunga , government unit mark ah dha public exam ku poduvohnu few months before sonnaga ,so naanga nalla paduchidha ezhudhinoh,plz revision Mark podavum

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!