தமிழகத்தில் 23 மாவட்டங்களில் பேருந்து சேவைகள்? முதல்வர் ஆலோசனை!

0
தமிழகத்தில் 23 மாவட்டங்களில் பேருந்து சேவைகள்? முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் 23 மாவட்டங்களில் பேருந்து சேவைகள்? முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் 23 மாவட்டங்களில் பேருந்து சேவைகள்? முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கையை விட குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் அரசு அறிவித்த முழு ஊரடங்கு உத்தரவு ஜூன் 28 உடன் முடிவடைவதால், ஊரடங்கு தொடர்பான ஆலோசனையில் முதல்வர் ஈடுபட்டுள்ளார்..

கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை தாக்கமானது கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி தீவிரமடைந்து வந்தது. முன்னதாக கொரோனா வைரஸின் முதலாம் அலையின் தாக்கம் சற்றே ஓய்ந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கி தமிழகம் பழைய நிலைக்கு திரும்பியது. இதற்கிடையில் தான் பிப்ரவரி மாதம் முதல் கொரோனா 2 ஆம் அலையின் தாக்கம் துவங்கியது. எனினும் ஏப்ரல் மாதத்தில் தான் கொரோனா தினசரி பாதிப்புகள் எண்ணிக்கை வேகமெடுக்க துவங்கியது.

இன்று முதல் கோவில்கள் திறப்பு, பக்தர்கள் அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!

இதை தொடர்ந்து மே மாதம் 10 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. இருப்பினும் தமிழகத்தில் மே 21 ஆம் தேதி அன்று கொரோனா தாக்கம் 36,184 என்ற எண்ணிக்கையில் புதிய உச்சம் தொட்டது. அதன் பின்பாக தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த கட்டுப்பாடுகள் நிமித்தமாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து, நேற்று (ஜூன் 24) ஒரு நாளில் 6,162 நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இறப்பு எண்ணிக்கை 155 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது. தவிர மருத்துவமனைகளில் சிகிச்சை முடித்து 9,046 பேர் வீடு திரும்பி உள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 49,845 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே போல இந்தியா முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்து வருகிறது. மே மாதத்தில் தினசரி பாதிப்பு 4 லட்சமாக பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த பாதிப்புகள் 50 ஆயிரமாக குறைந்துள்ளது.

தமிழக பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பிளஸ் 2 மதிப்பெண் தயாரிப்பு பணி!

தமிழகத்தை பொறுத்தவரை ஒரு நாள் அதிகபட்ச பாதிப்பில் கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 400க்கும் மேலாக பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல புதுக்கோட்டை, தென்காசி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 18 மாவட்டங்களில் 100க்கும் குறைவான புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் புதிய பாதிப்புகள் குறைந்திருப்பதால் வரும் நாட்களில் அரசு கூடுதல் தளர்வுகளை அளிக்கும் என மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் தமிழகத்தில் கடைசியாக அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 28 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஊரடங்கு தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் இன்று (ஜூன் 25) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். அதன் படி இன்று காலை 11 மணியளவில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உணவு வழங்கல் துறை உத்தரவு!

தமிழகத்தில் தற்போது கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளின் படி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேருந்து சேவைகள் இயங்கி வரும் நிலையில், பாதிப்பு குறைவாக உள்ள மற்ற 23 மாவட்டங்களிலும் போக்குவரத்து சேவைகள் அனுமதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதே போல நோய் பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள், தேநீர் கடைகள் போன்றவையும் திறக்க அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!