எந்த மாதிரியான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை – முழு விவரம் இதோ!

0
எந்த மாதிரியான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை - முழு விவரம் இதோ!
எந்த மாதிரியான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை - முழு விவரம் இதோ!
எந்த மாதிரியான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை – முழு விவரம் இதோ!

ஜூலை மாதம் இன்று முதல் தொடங்கி உள்ளது. இந்த மாதத்தின் முதல் தேதியில் இருந்து பல பெரிய மாற்றங்கள் அமலுக்கு வந்து உள்ளன. அந்த வகையில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று 1ம் தேதி முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை:

நடப்பு நிதியாண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டு இன்று முதல் தொடங்குகிறது. அது மட்டுமல்லாமல் பல புதிய மாற்றங்களும் நடைமுறைக்கு வந்து உள்ளன. இன்று முதல் தொழிலாளர்களுக்கான புதிய சட்டங்கள், கிரெடிட் கார்டு, பிளாஸ்டிக் தடை உள்ளிட்ட ஏராளமான மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. அந்த வகையில் ரிசர்வ் வங்கியின் கிரெடிட் கார்டு & டெபிட் கார்டு வழங்கல் மற்றும் செயல்பாடு குறித்த வழிகாட்டல்கள் 2022 , இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதையடுத்து பான் கார்டையும், ஆதார் கார்டையும் இணைப்பதற்கான காலக்கெடு ஏற்கெனவே முடிந்துவிட்டது.

Exams Daily Mobile App Download

இருப்பினும் ரூ.500 செலுத்தி இதனை இணைப்பதற்க்கான காலக்கெடுவும் ஜூன் 30ம் தேதியுடன் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜூலை 1ம் தேதி முதல் இரு மடங்கு அதாவது ரூ1000 செலுத்தி கார்டை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து தொழிலாளர்களுக்கான புதிய சட்டங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இதன்படி,தொழிலாளர் ஊதியம், சமூகப் பாதுகாப்பு, தொழிலாளர் உறவு, பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம், பணிச்சூழல் ஆகியவை குறித்து புதிய விதிகள் வந்துள்ளன.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகும் தனம் – புதுவித கெட்டப்பில் வைரலாகும் வீடியோ!

இதையடுத்து ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்படுகிறது. அதாவது சுற்றுச்சூழலுக்கும், கடற்சார் பகுதிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் போன்றவை ஜூலை 1ம் தேதி முதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.

அதாவது பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சி, ஸ்ட்ரா, பிளாஸ்டிக் ஸ்பூன், பிளாஸ்டிக் கப், ட்ரே, பிளாஸ்டிக் கத்தி, ரேப்பர், சிகரெட் பாக்கெட், இன்விடேஷன் கார்ட்ஸ் அலங்காரத்திற்கான பாலிஸ்டிரீன், 100 மைக்ரானுக்கு கீழான PVC பேனர்ஸ், ஸ்ட்ராக்கள், ஸ்டிர்ரர் (கிளறிகள்) உள்ளிட்டவைக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் தடை செய்யப்பட்ட பொருள்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்க தேசிய மற்றும் மாநில எல்லைகளில் சோதனைசாவடிகளை அமைத்து தடை செய்யப்பட்ட பொருள்கள் மாநிலங்களுக்கு இடையே எடுத்துச் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here