‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகும் தனம் – புதுவித கெட்டப்பில் வைரலாகும் வீடியோ!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து விலகும் தனம் - புதுவித கெட்டப்பில் வைரலாகும் வீடியோ!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து விலகும் தனம் - புதுவித கெட்டப்பில் வைரலாகும் வீடியோ!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகும் தனம் – புதுவித கெட்டப்பில் வைரலாகும் வீடியோ!

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா புது ப்ராஜெக்ட் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து சுஜிதா விலகிவிட்டாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமாகும் நடிகர்கள், நடிகைகள் என அனைவருமே சில நாட்களிலேயே ரசிகர்களின் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று விடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் சீரியலின் மூலமாக திரைப்பட வாய்ப்புகளும் வந்து குவிந்தவண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூத்த அண்ணியாக நடித்து கொண்டிருப்பவர் தான் சுஜிதா. இவர், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிப்பதற்கு முன்பாகவே ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Exams Daily Mobile App Download

ஆனால், அந்த திரைப்படங்களை காட்டிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இவர் நடிக்கும் கதாபாத்திரம் தான் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. சீரியல் ஒரு பக்கம் இருந்தாலும் கூட இந்த சீரியல் நடிகைகள் போட்டோ ஷூட் மற்றும் மாடலிங்கிலும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். மேலும் இப்படி, போட்டோஷூட், சீரியல் ஷூட்டிங் என்று பிஸியாக இருந்தாலும் கூட சமூக வலை பக்கங்களில் ரசிகர்களுடன் தொடர்பிலே இருந்து வருகிறார்கள். குடும்பத்தினருடன் சுற்றுலா என எங்கு சென்றாலும் அதை வீடியோவாக யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – புதிய மெனு, டெலீட் & அனிமேஷன் அம்சம் அறிமுகம்!

அந்த வகையில் சுஜிதா தற்போது நடத்தி வரும் கதை கேளு கதை கேளு என்கிற யூடியூப் பக்கத்தில் ஒரு போட்டோஷூட் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். எப்போதுமே சுஜிதா அதிக அளவில் மேக்கப் போடாமல் இயற்கையாக தான் இருப்பார். ஆனால், தற்போது ஒரு புது ப்ராஜெக்டுக்காக தனது லுக்கை மொத்தமாக மாற்றியுள்ளார். மேலும், இது என்ன ப்ராஜெக்ட் என்பதை கூடிய விரைவில் உங்களுக்கு கூறுவேன் என்றும் கூறியுள்ளார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து சுஜிதா விலகிவிட்டாரா எனவும் கேள்வி எழுந்துள்ளது. இருந்தாலும் கூட அந்த புது ப்ராஜெக்ட் என்ன என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!