தமிழக கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு 3 நாட்கள் தடை – இன்று முதல் அமல்!

0
தமிழக கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு 3 நாட்கள் தடை - இன்று முதல் அமல்!
தமிழக கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு 3 நாட்கள் தடை - இன்று முதல் அமல்!
தமிழக கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு 3 நாட்கள் தடை – இன்று முதல் அமல்!

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக ஆடி மாத திருவிழாக்களையொட்டி பக்தர்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் முக்கிய கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

கோவில்கள் மூடல்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைவு காரணமாக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த முறை வழங்கப்பட்ட தளர்வுகளில் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது ஆடி மாதம் என்பதால் முக்கிய கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். இதனால் பக்தர்கள் அதிகம் கூடுவார்கள்.  அதன் காரணமாக கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

கொரோனா மூன்றாம் அலை பரவல் அடுத்த மாதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் வழங்கப்பட்ட தளர்வுகளில் சில மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், எனவே மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிடப்பட்டது. அதன்படி சென்னை மாநகராட்சியில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஆடி மாதம் திருவிழா நடைபெறும் கோவிகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை – முழு பட்டியல் இதோ!

குறிப்பாக காவேரி ஆறு பாயும் மாவட்டங்களில் ஆடி மாத திருவிழாக்கள் நடைபெறும். அதனால் தமிழகம் முழுவதும் கோவிகளில் பக்தர்களின் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள வடபழனி, கந்தகோட்டம் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களிலும், அம்மன் கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி கிருத்திகையை ஒட்டி, ஆகஸ்டு 2 மற்றும் 3ம் தேதிகளில் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிலும், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருத்தணி கோயில் சிறப்பு பூஜைகள் இணையதளத்திலும், யூடியுப் சேனலிலும் நேரடியாக மாலை ஐந்து மணி அளவில் ஒளிபரப்பப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழக – கேரளா எல்லையில் தீவிர கண்காணிப்பு – கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

மதுரை மீனாட்சியம்மன் ஆலயம், கள்ளழகர் கோயில், கூடலழகர் பெருமாள் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில்களில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் ஆடி கிருத்திகை அன்று கோயில் நிகழ்வுகளில், அர்ச்சகர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகிறது. பேரிகார்டு அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகஸ்ட் 2 முதல் மாலை 5 மணிவரை மட்டுமே கடைகளை திறக்க அனுமதி – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில், திருவக்கரை சந்திர மௌலீஸ்வரர் திருக்கோயில், மயிலம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், அவலூர்பேட்டை சித்தகீரிஸ்வரர் முருகன் திருக்கோயில், கீழ்புத்துப்பட்டு மஞ்சினீஸ்வரர் திருக்கோயில் உட்பட அனைத்து பிரதான திருக்கோயில்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு 01.08.2021 ஞாயிற்றுக்கிழமை முதல் 03.08.2021 செவ்வாய்க்கிழமை வரை சாமி தரிசனம் மற்றும் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!