ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை – முழு பட்டியல் இதோ!

0
ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை - முழு பட்டியல் இதோ!
ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை - முழு பட்டியல் இதோ!
ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை – முழு பட்டியல் இதோ!

இந்த மாதம் வங்கிகள் மூடப்படும் நாட்களின் முழு பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டு உள்ளது. அந்த விடுமுறை நாட்காட்டியின்படி அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் இந்த மாதம் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட 15 நாட்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கிகள் விடுமுறை:

ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி, வங்கிகள் ஆகஸ்ட் மாதத்தில் 8 நாட்கள் மூடப்பட்டிருக்கும் மற்றும் மீதமுள்ள விடுமுறை நாட்கள் வார இறுதி நாட்கள் ஆகும். பெரும்பாலான மாநிலங்களில் உள்ள வங்கிகள் ஆகஸ்ட் 19ம் தேதி அன்று முஹர்ரம் பண்டிகையையொட்டி விடுமுறையாக இருக்கும். முஹர்ரம் தவிர, வங்கிகள் ஜன்மாஷ்டமி, பார்ஸ் புத்தாண்டு, ஓணம் மற்றும் பிற பண்டிகை காலத்திலும் மூடப்படும். குறிப்பாக, வங்கி விடுமுறைகள் குறிப்பிட்ட மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகளைப் பொறுத்தது மற்றும் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாறுபடும்.

  • 01 ஆகஸ்ட் 2021 – வாராந்திர விடுமுறை (ஞாயிறு)
  • 08 ஆகஸ்ட் 2021 – வாராந்திர விடுமுறை (ஞாயிறு)
  • 13 ஆகஸ்ட் – தேசபக்தர் தினம் (மணிப்பூர்)
  • 14 ஆகஸ்ட் 2021 – இரண்டாவது சனிக்கிழமை
  • 15 ஆகஸ்ட் 2021 – வாராந்திர விடுமுறை (ஞாயிறு), சுதந்திர தினம்
  • ஆகஸ்ட் 16 – பார்ஸ் புத்தாண்டு (மகாராஷ்டிரா)
  • ஆகஸ்ட் 19 – முஹர்ரம் (திரிபுரா, குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் பிற மாநிலங்கள்)
  • 20 ஆகஸ்ட் – ஓணம் (கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு)
  • 21 ஆகஸ்ட் – திருவோணம் (கேரளா)
  • 22 ஆகஸ்ட் 2021 – வாராந்திர விடுமுறை (ஞாயிறு)
  • 23 ஆகஸ்ட் – ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி (கேரளாவில் விடுமுறை)
  • 28 ஆகஸ்ட் 2021 – நான்காவது சனிக்கிழமை
  • 29 ஆகஸ்ட் 2021 – வாராந்திர விடுமுறை (ஞாயிறு)
  • 30 ஆகஸ்ட் – ஜன்மாஷ்டமி: (குஜராத், தமிழ்நாடு, உத்தரகண்ட், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் பிற மாநிலங்கள்)
  • ஆகஸ்ட் 31 – ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமி (தெலுங்கானா மற்றும் ஆந்திரா)

அனைத்து வங்கிகளும் பொது விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும். நாடு முழுவதும் உள்ள வங்கிகளால் கெஜட்டட் விடுமுறை நாட்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here