விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி யார் தெரியுமா? இணையத்தில் லீக்கான தகவல்கள்!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் கோபி யார் தெரியுமா? இணையத்தில் லீக்கான தகவல்கள்!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் கோபி யார் தெரியுமா? இணையத்தில் லீக்கான தகவல்கள்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி யார் தெரியுமா? இணையத்தில் லீக்கான தகவல்கள்!

பாக்கியலட்சுமி தொடர் மக்களின் மத்தியில் இவ்வளவு ரீச் ஆனதிற்கு முக்கியமான காரணமாக இருந்துவரும் கோபி குறித்தான சுவாரஸ்யமான பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், சதீஷ் இத்தனை திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளாரா என ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர்.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மூலமாகவே பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் ரசிகர்களின் மத்தியில் விரைவில் பிரபலமாகி விடுகின்றனர். அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக மக்களின் மத்தியில் பிரபலமானவர் தான் பாக்கியலட்சுமி கோபி. பாக்கியாவிடம் மாட்டிக் கொள்ளும்போது என ஒவ்வொரு தருணங்களிலும் கோபியின் நடிப்பு மிகவும் தத்ரூபமாக இருக்கும். பாக்கியலட்சுமி சீரியல் மக்களின் மத்தியில் இவ்வளவு ரீச்சானதிற்கு முக்கியமான காரணம் கோபியின் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் தான்.

முக்கிய சீரியலில் இருந்து விலகிய “பாரதி கண்ணம்மா” வெண்பா பரீனா – இதுதான் காரணம்?

முழுக்க முழுக்க சதீஷ்ஷால் மட்டுமே பாக்கியலட்சுமி தொடர் டிஆர்பியிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. இவருக்கு பதிலாக வேறு ஏதேனும் நடிகர் நடித்திருந்தால் கூட பாக்கியலட்சுமி தொடர் இந்த அளவு ரீச் ஆகியிருக்குமோ என்பது சந்தேகமே. தற்போது கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் குறித்தான சுவாரஸ்யமான பல தகவல்கள் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. அதாவது கோபி பாக்கியலட்சுமி சீரியலில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே எக்கச்சக்க திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார் மற்றும் விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார். 1999ஆம் ஆண்டு வெளியான மின்சார பூவே என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார்.

ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் மற்றும் எம் ஜி ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் போன்ற வரலாற்று திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் நான் கோபியின் வாழ்க்கையை திருப்பி போட்டது. அதாவது இந்த திரைப்படத்தின் மூலமாகவே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கியுள்ளார்.. இந்த திரைப்படங்களை தொடர்ந்து தனி ஒருவன் மற்றும் இருமுகன் போன்ற திரைப்படங்களிலும் குணசித்திர வேடத்தில் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் மந்திரவாசல், சூலம், ஆனந்தம், கல்யாண பரிசு, மகாராணி என ஏகப்பட்ட சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதற்குப் பிறகு தான் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!