முக்கிய சீரியலில் இருந்து விலகிய “பாரதி கண்ணம்மா” வெண்பா பரீனா – இதுதான் காரணம்?

0
முக்கிய சீரியலில் இருந்து விலகிய
முக்கிய சீரியலில் இருந்து விலகிய "பாரதி கண்ணம்மா" வெண்பா பரீனா - இதுதான் காரணம்?
முக்கிய சீரியலில் இருந்து விலகிய “பாரதி கண்ணம்மா” வெண்பா பரீனா – இதுதான் காரணம்?

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா தற்போது முக்கியமான சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அது குறித்த காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் டாப் சீரியலில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியல் வில்லி வெண்பாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். ஒரு வில்லிக்கு இவ்வளவு ரசிகர்களா என வியந்து பார்க்கும் அளவிற்கு இன்ஸ்டாவில் அவருக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் போது அவர் கர்ப்பமாக இருந்தார். ஆனால் சீரியலில் இருந்து விலகாமல் தன்னுடைய கடைசி மாதம் வரை அவர் நடித்து வந்தார். அதனால் பலர் வாழ்த்துக்களை கூறி வந்தனர்.

சன் டிவி “நாதஸ்வரம்” சீரியல் நடிகையின் சோகமான திருமண வாழ்க்கை – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

இந்நிலையில் வெண்பா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கலர்ஸ் தமிழ் டிவியில் அபி டெய்லர் சீரியலில் நடித்து வந்தார். இதுவரை நெகட்டிவ் கதாபாத்திரத்தில் பார்த்த ரசிகர்கள் தற்போது பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்ததால் ரசிகர்களுக்கு உற்சாகத்தில் இருந்தனர். பவானி கதாபாத்திரத்திற்க்கும் தனியாக ரசிகர் மன்றம் வைக்கும் அளவிற்கு ரசிகர்கள் இருந்தனர். ஆனால் தற்போது பரீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை சுஜிதா – ரசிகர்கள் அதிர்ச்சி!

அதாவது அவர் அபி டெய்லர் சீரியலில் பவானி கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்க மாட்டேன் என பதிவிட்டிருக்கிறார். ரசிகர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி என அவர் சொல்லி இருக்கிறார். நேர பற்றாக்குறையே அவர் பவானி கதாபாத்திரத்தில் இருந்து விலக காரணம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இது பற்றி பரீனா எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இருந்தாலும் பவானி ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!