‘பாக்கியலட்சுமி’ எழில் விஜே விஷாலுக்கு ரசிகர்களின் சர்பிரைஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் – வைரலாகும் வீடியோ!

0
'பாக்கியலட்சுமி' எழில் விஜே விஷாலுக்கு ரசிகர்களின் சர்பிரைஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் - வைரலாகும் வீடியோ!
'பாக்கியலட்சுமி' எழில் விஜே விஷாலுக்கு ரசிகர்களின் சர்பிரைஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் - வைரலாகும் வீடியோ!
‘பாக்கியலட்சுமி’ எழில் விஜே விஷாலுக்கு ரசிகர்களின் சர்பிரைஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் எழில் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் விஜே விஷாலுக்கு ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு சர்பிரைஸ் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நிகழ்த்த, இது தொடர்பான வீடியோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜே விஷால்

தமிழ் சின்னத்திரை தொடர்களில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு முக்கிய சீரியலான ‘பாக்கியலட்சுமி’ தற்போது 400 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. பொதுவாக, இந்த சீரியல் இந்திய சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தலைவிகளையும் பிரதிபலிப்பது போல அமைந்திருப்பதால் இதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் இடம் பிடித்திருந்தாலும், இதில் அம்மா பாக்கியலட்சுமி, மகன் எழில் ஆகியோருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு.

தன் அப்பாவிற்கு டிரஸ் செலக்ட் பண்ண சொல்லும் லட்சுமி – வெறுப்பில் பாரதி! அதிர்ச்சியில் கண்ணம்மா!

ஏனென்றால் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில், குடும்பத்தில் உள்ள பலராலும் புறக்கணிக்கப்படும் அம்மா பாக்கியாவுக்கு ஒரே ஆறுதலாக இருப்பது மகன் எழில் தான். அதனால் இந்த எழில் கதாப்பாத்திரம் பலராலும் ஸ்பெஷல் ஆக பார்க்கப்படுகிறது. தமிழ் சின்னத்திரையில் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆறிமுகமான விஜே விஷால் இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் மூலம் நடிகராக அவதாரம் எடுத்திருந்தார். இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் விஜே விஷாலுக்கு ஒரு சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுத் தந்திருக்கிறது.

தாத்தா மருத்துவத்திற்கு பணம் இல்லாமல் இருக்கும் பாக்கியா, செழியனிடம் சண்டை போடும் ஜெனி – இன்றைய எபிசோட்!

இப்படி இருக்க சமீபத்தில் விஜே விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ஒரு சர்பிரைஸ் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நிகழ்த்த, இதன் மூலம் நெகிழ்ச்சியான விஷால் ‘பொதுவாக என்னுடைய பிறந்தநாளை என்து குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தான் கொண்டாடுவேன். இதுவும் என்னுடைய குடும்பம் தான். அதனால் இன்றும் என்னுடைய குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை யாரும் நடிகனாக பார்க்காமல் ஒரு அண்ணனாக, மகனாக தான் பார்க்கின்றனர். இது தான் எனக்கு சந்தோஷம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கொண்டாட்டத்தில் ஆட்டம், பாட்டமும் இடம்பிடிக்க, செலிபிரேஷன் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!