தன் அப்பாவிற்கு டிரஸ் செலக்ட் பண்ண சொல்லும் லட்சுமி – வெறுப்பில் பாரதி! அதிர்ச்சியில் கண்ணம்மா!

0
தன் அப்பாவிற்கு டிரஸ் செலக்ட் பண்ண சொல்லும் லட்சுமி - வெறுப்பில் பாரதி! அதிர்ச்சியில் கண்ணம்மா!
தன் அப்பாவிற்கு டிரஸ் செலக்ட் பண்ண சொல்லும் லட்சுமி - வெறுப்பில் பாரதி! அதிர்ச்சியில் கண்ணம்மா!
தன் அப்பாவிற்கு டிரஸ் செலக்ட் பண்ண சொல்லும் லட்சுமி – வெறுப்பில் பாரதி! அதிர்ச்சியில் கண்ணம்மா!

பாரதி கண்ணம்மா சீரியலில் தன் பிறந்த நாள் விழாவின் போது லக்ஷ்மியின் அப்பாவை பற்றி சொல்ல இருப்பதாக கண்ணம்மா கூறியிருக்கும் நிலையில், அது குறித்த ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் ஆட்டோ குமாரின் தங்கை வந்தவர்கள் கண்ணம்மாவை பற்றி தவறாக பேசியதை தாங்க முடியாமல் லக்ஷ்மியும், குமாரும் சண்டை போட, அப்போது கண்ணம்மா வேறு வழியில்லாமல் தன் பிறந்த நாள் விழாவின் போது லக்ஷ்மியின் அப்பாவை பற்றி சொல்ல இருப்பதாக சொல்லி விடுகிறாள். இதனால் லட்சுமி மிகவும் உற்சாகம் அடைகிறாள். தான் அப்பாவை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறாள்.

தாத்தா மருத்துவத்திற்கு பணம் இல்லாமல் இருக்கும் பாக்கியா, செழியனிடம் சண்டை போடும் ஜெனி – இன்றைய எபிசோட்!

ஆனால் வடிவு அதற்கு பிறகு,உன் அப்பா பற்றி பாரதி அங்கிளுக்கு தெரியும் என்று சொல்லி விடுகிறாள். இதனால் லட்சுமி பாரதியிடம் போன் செய்து என் அப்பாவை உங்களுக்கு முன்னரே தெரியுமாமே, யார் அங்கிள் என் அப்பா என்று லட்சுமி கேட்க,அதற்கு பாரதி பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார். இதனால் ஹேமாவிடம் கேட்க சொல்லி லட்சுமி சொல்கிறாள். இதனால் பாரதி கடுமையாக கோவத்தில் இருக்கிறான். இன்னொரு புறம் லட்சுமி தன் அப்பாவிற்கு டிரஸ் எடுக்க நினைக்கிறாள்.

தடைகளை தாண்டி கடையை திறந்த குடும்பத்தினர், சாப்பாடு ஊட்டிவிட்ட மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

இதற்காக பல சைஸ்களில் உள்ள டிரெஸ்களை எடுத்துக் கொண்டு லட்சுமி பாரதியிடம் சென்று தன் அப்பாவிற்கு எது சரியாக இருக்கும் என்று கேட்க, பாரதி அதில் இருப்பதிலேயே பெரிய சைஸ் டிரஸ் ஒன்றை எடுத்து கொடுத்து இது தான் உன் அப்பாவுக்கு சரியாக இருக்கும் என்று சொல்கிறான். கண்ணம்மாவிடம் வந்து பாரதி செலக்ட் பண்ணிய சட்டையை காண்பிக்க கண்ணம்மா இப்பொழுது கடும் அதிர்ச்சியில் அடைகிறாள். இதனால் அடுத்து வரப்போகும் சம்பவங்கள் குறித்து பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here