ராதிகாவை திருமணம் செய்து கொள்ள தயாரான கோபி? ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு!

0
ராதிகாவை திருமணம் செய்து கொள்ள தயாரான கோபி? 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்த ட்விஸ்டு!
ராதிகாவை திருமணம் செய்து கொள்ள தயாரான கோபி? 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்த ட்விஸ்டு!
ராதிகாவை திருமணம் செய்து கொள்ள தயாரான கோபி? ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபி கல்யாண மாப்பிள்ளை போல வேஷ்டி, சட்டையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பாக்கியலட்சுமி கோபி

தற்போது பல்வேறு திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்தகட்ட கதைக்களம் என்னவாக இருக்கும் என்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, கோபி, ராதிகாவை திருமணம் செய்ய இருக்கும் மொத்த உண்மையையும் தெரிந்து வைத்திருக்கும் ராமமூர்த்தி வாய் பேசமுடியாமல் ஆகி விட்டார். இதுவரை ராமமூர்த்திக்கு எதிராக விதண்டாவாதம் பேசி வந்த கோபி, அப்பாவின் இந்த நிலைமைக்கு நானே காரணம் ஆகி விட்டேன் என்று வருந்துகிறார்.

‘பிக் பாஸ்’ அல்டிமேட்டில் என்ட்ரி கொடுக்கும் தாடி பாலாஜியின் மனைவி நித்யா – ரசிகர்கள் காட்டம்!

மறுபக்கத்தில் ராதிகாவை திருமணம் செய்து கொள்வதாக சத்தியம் செய்திருக்கும் கோபி அவருக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் நிற்கிறார். அதே சமயம் பார்த்து ராதிகாவும் தனக்கு விவாகரத்து கிடைத்த விஷயத்தை கோபியிடம் மகிழ்ச்சியாக கூறுகிறார். இப்போது அப்பா ராமமூர்த்தி மற்றும் ராதிகாவுக்கு இடையே கோபி சிக்கித்தவிப்பதை போல ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் காட்சிகள் நகர்ந்து வருகிறது. இதற்கிடையில் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களத்திற்கான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி பட்டு வேஷ்டி, சட்டையணிந்து மாப்பிள்ளை கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வலைதளங்களில் ஷேர் செய்திருக்கும் நடிகர் சதீஷ், தனக்கே உரிய பாணியில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதாவது, ‘அட என்ன கோபி இது. பையோட, மாப்பிள்ளை கெட்டப். ரெடியா இருக்கேன் பாஸ். ஒன்னு எழிலோட கல்யாணம். இல்லையென்றால் என்னோட கல்யாணம். சம்பவம் இருக்கு. ஓடுறதுக்கு ரெடியாக இருக்கேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கண்ணம்மாவின் பிறந்த நாள் விழாவுக்கு புறப்படும் ஹேமா & சௌந்தர்யா – ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ ரிலீஸ்!

இந்த புகைப்படம், தற்போது கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்ளப்போகிறாரா என்ற சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது. அப்படி திருமணம் நடைபெற்றால் அதை நிறுத்துவதற்கு ராமமூர்த்தி இல்லை. எழிலுக்கும் இந்த விஷயம் தெரிவதற்கு வாய்ப்பில்லை என்றால் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து என்ன நடைபெறும் என்ற ஆவல் ரசிகர்களிடம் மேலோங்கி இருக்கிறது. இது தவிர ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடிகர் சாம் புதிய கேரக்டர் ஒன்றில் அறிமுகமாக இருக்கிறார். ஒருவேளை கோபியின் திருமணத்தை நிறுத்துவது இவராக இருக்கலாமா என்ற நோக்கத்திலும் ரசிகர்கள் சிந்திக்க துவங்கியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!